உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ட்ரீட் தர மறுத்த 16 வயது சிறுவனை குத்தி கொன்ற நண்பர்கள்

ட்ரீட் தர மறுத்த 16 வயது சிறுவனை குத்தி கொன்ற நண்பர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : டில்லியில், புதிதாக வாங்கிய மொபைல் போனுக்கு, 'ட்ரீட்' தர மறுத்த சிறுவனை, அவனது நண்பர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கிழக்கு டில்லி மாவட்டத்தில் உள்ள ஷகர்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த, சச்சின் என்ற 16 வயது சிறுவன், சமீபத்தில் புதிதாக மொபைல் போன் வாங்கினான். இதற்கு ட்ரீட் தரும்படி அவனது நண்பர்கள் மூன்று பேர் கேட்டனர். ஆனால், சச்சின் மறுத்தான். இது தொடர்பாக, சச்சினுக்கும், அவனது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால், சச்சினை சரமாரியாக குத்தினர்.படுகாயமடைந்த சச்சினை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். ஷகர்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், இந்த சம்பவம் குறித்து அறிந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், சச்சினை குத்திக் கொன்ற மூன்று சிறுவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RaajaRaja Cholan
செப் 25, 2024 11:34

தர்மதுரை தங்கதுரை திராவிட எச்ச என்பது அவரது பேச்சில் தெரிகிறது , நாகரீகமற்ற என்ன மிருகம? மூர்க்கனாய் இருப்பானோ ? , இல்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2024 10:53

எந்த முன்னணி செய்தித்தாளிலும் அவர்களது பெயர் இல்லை ன்னா பார்த்துக்கோங்க ..... எந்த அளவுக்கு மர்ம சிறுவர்களா இருப்பாங்க ....


gayathri
செப் 25, 2024 09:06

இதெற்கெல்லாம் நேரு தான் காரணம்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2024 10:47

நோ ..... உன்னை அடையத்தான் போட்டியாக இருக்கும் .....


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 08:21

எவ்வளவு மோசமான நிலையில் இன்றைய சிறுவர்கள் உள்ளனர். டிவியில் சினிமாவில் பார்த்து இதெல்லாம் நடக்கிறது. சென்ஸார் போர்டு டிவி சீரியலுக்கும் வேண்டும்.


Yogeshvar
செப் 25, 2024 08:13

யாரோட பேரும் இல்ல. எந்த மாதிரி குடும்பத்து பசங்களா இருக்கும்?hmmm....


அப்பாவி
செப் 25, 2024 06:34

அடப்பக்கிப்பர தேசிங்களா..


Ms Mahadevan Mahadevan
செப் 25, 2024 06:03

இவர்கள் நண்பர்கள் என்று எதை வைத்து சொல்லுகிறார்கள்? இளம் வயதில் இப்படியான போ க்கிர்க்கு யார் காரணம்? ஊடகங்கள், சினிமா, பெற்ரோர் தான் காரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை