உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தாராலி வரை; உயிர் பலி வாங்கும் மேகவெடிப்பு துயர சம்பவங்கள்!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தாராலி வரை; உயிர் பலி வாங்கும் மேகவெடிப்பு துயர சம்பவங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 4 பேர் உயிரிழந்தனர். 50 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், தாராலி அருகே சுகி டாப் என்ற இடத்திலும் மேகவெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த காலங்களில் இந்தியா முழுவதும் மேக வெடிப்புகள் பல பேரழிவு நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளன. அதன் விபரம் பின்வருமாறு:* இமயமலையில் அமைந்துள்ள காளி பள்ளத்தாக்கு, குமாவோன் (ஆகஸ்ட் 1998). இந்த மேக வெடிப்பு சம்பவத்தில், 250க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.* குந்தா, ருத்ரபிரயாக், உத்தராகண்ட் மாநிலம் (ஆகஸ்ட் 17, 1979)- 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.* மும்பை (ஜூலை 2005)- 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.* லே, லடாக் (ஆகஸ்ட் 2010)- 500க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.* உத்தர்காசி (செப்டம்பர் 2012)- 45 பேர் உயிரிழந்தனர்.*காஷ்மீர் பள்ளத்தாக்கு (செப்டம்பர் 2014)- 200 பேர் உயிரிழந்தனர்.*சாமோலி, உத்தராகாண்ட் (ஆகஸ்ட் 16, 1991)- 26 பேர் உயிரிழந்தனர்.*ருத்ரபிரயாக், உத்தரகாண்ட் (ஆகஸ்ட் 11-19, 1998)- 103 பேர் இறந்தனர்.* அரகோட், மோரி, உத்தர்காசி (ஆகஸ்ட் 18, 2019)- 21 பேர் உயிரிழந்தனர்.* கேதார்நாத் (ஜூன் 16-17, 2013) : 5,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் போயினர்.*மண்டி, ஹிமாச்சலப் பிரதேசம் (2025)- பல மேக வெடிப்பு சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காணாமல் போயினர்.* இன்று (ஆகஸ்ட் 5) - உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் நான்கு பேர் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஆக 05, 2025 20:30

நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தாவிடம் மொழி பிரச்சினை பற்றி ஆதரவாக பேசிய தமிழக முதல்வர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேகவெடிப்பினால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக ஏன் பேசவில்லை. ஏன் திமுக கழக கண்மணிகளை அங்கு அனுப்பி அவர்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 06, 2025 00:32

வருடாவருடம் ப‌‌‌ல வருடங்களாக இந்த கொடுமை நடக்கிறது. இரட்டை எஞ்சின் குறட்டை விட்டு தூங்குகிறதா?


அப்பாவி
ஆக 05, 2025 19:50

இன்னிக்கி எங்க ஊரில் ஓங்கி ஒரு மழை பெஞ்சது . நாலு பக்கமும் மழை நீர் ஓட வழியில்லாமல் தண்ணீர் தேங்கி நிக்கிது. ஆதிகாலத்திலிருந்தே இலவச சோறு போட்டு, மக்களுக்கு தேவையான வடிகால், சாக்கடை வசதிகளை செய்யாம தத்தியான அரசுகள் நாட்களை கடந்த 60,70 வருஷமா ஓட்டுக்கிட்டிருக்கின்றன. இப்போது இருக்கும் தத்திகள் அவங்களை விட மோசம்.


SURESH M
ஆக 18, 2025 10:32

நல்ல பதிவு ஐயா ... இலவசம் என்றதும் எனக்கு உனக்கு என அடித்துக்கொள்ளும் இந்த தத்திகள் எதிர்த்து கேள்வி கேட்பதும் உரிமைகளை மீட்கவும் குரல் குடுக்கும் சக்தியாக உருவாகும் பொது அந்த தத்திகள் காணாமல் போகும்.


Nada raja
ஆக 05, 2025 19:36

ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை