உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொடுத்தது ரூ.4200 : ரஷ்ய பெண்ணுக்கு கிடைத்தது 12 ஆண்டு சிறை

கொடுத்தது ரூ.4200 : ரஷ்ய பெண்ணுக்கு கிடைத்தது 12 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உக்ரைன் போர் நிவாரணத்திற்கு 50 டாலர் நன்கொடை கொடுத்த குற்றத்திற்காக அமெரிக்க வாழ் ரஷ்ய பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய கோர்ட் தீர்ப்பளித்தது.அமெரிக்க வாழ் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் கேஸினியா கரேலினா,33, அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரில் பாலே நடன கலைஞராகவும், ‛ஸ்பா' மசாஜ் சென்டர் ஊழியராக உள்ளார். இவர் தனது தன் குடும்பத்தினரை பார்க்க அடிக்கடி ரஷ்யா வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை அமைப்பு உக்ரைன் நிவாரணத்திற்கு நன்கொடை வசூலித்து தருகிறது. இந்த அமைப்பிற்கு கேஸினியா கரேலினா 50 அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கினார். இதையறிந்த ரஷ்ய அரசு அவர் மீது சட்டத்திற்கு புறம்பாக நிதி வழங்கியதாக வழக்குப்பதிவு செய்தது. சமீபத்தில் தனது குடும்பத்தினரை பார்க்க ரஷ்யா வந்த கேஸினியா கரேலியா கைது செய்யப்பட்டார். உள்ளூர் கோர்ட்டில் நடந்த விசாரணையில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nandakumar Naidu.
ஆக 16, 2024 01:59

நம் நாட்டில் உள்ள தேச விரோத ஓநாய்கள்களுக்கு இவ்வாறு 25 ஆண்டுகள் உடனடி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கி உள்ளே தள்ள வேண்டும்.


Nagarajan D
ஆக 15, 2024 23:34

சரியான தீர்ப்பு... நாட்டிற்கு எதிராக எவன் என்ன செய்தாலும் இந்த மாதிரி தண்டனை வழங்கப்படவேண்டும்...நம் நாட்டு நீதிமன்றங்களை போல் தேச துரோகிகளை காப்பாற்றாமல் தண்டனை அதுவும் கடும் தண்டனை தருவது மிக மிக சரியே... இப்படி தீர்ப்பு பாரதத்தில் வருமானால் பப்பு காந்தி வாழ்க்கைக்கும் சிறையில் தான் இருக்கவேண்டிவரும்


Kavi
ஆக 15, 2024 21:34

Correct judgement


Kalyanaraman
ஆக 15, 2024 21:12

நம் நாடாக இருந்தால் கேஸ் முடியவே 12 வருடங்கள் ஆகியிருக்கும். அவ்வளவு ஓட்டைகள்.


Amruta Putran
ஆக 15, 2024 21:03

This law should be in India too


Iniyan
ஆக 15, 2024 20:58

இந்த மாதிரி நம்ம நீதி மன்றங்கள் என்றைக்கு செயல்படும்?


Ramesh Sargam
ஆக 15, 2024 20:54

அந்த நாடுகளில் நம் நாட்டைப்போல சட்டத்தில் ஓட்டைகள் இருக்காது போல தெரிகிறது. இருந்திருந்தால் அந்த ஓட்டைகளை பயன்படுத்தி அவருக்கு தண்டனை கிடைக்காமல் செய்திருக்கலாம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ