உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள்: உமர் அப்துல்லா விருப்பம்

அரசு ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள்: உமர் அப்துல்லா விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் சேர வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் அரசியல் கட்சிகளில் சேரட்டும்' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது நிருபர்கள் கேள்விக்கு, உமர் அப்துல்லா, ‛‛ அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் சேர வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் அரசியல் கட்சிகளில் சேரட்டும்'' என பதில் அளித்தார்.மேலும், அவர் கூறியதாவது: எங்களுக்கு மூன்று முக்கியமான பிரச்னைகள் உள்ளன. வேலையின்மை மிகப்பெரிய பிரச்னை. காஷ்மீரில் வேலையின்மை விகிதம் அதிகரித்து உள்ளது. எங்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. பார்லிமென்டில் இந்த பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venkatasubramanian krishnamurthy
ஜூலை 23, 2024 19:37

அரசு ஊழியர்கள் இப்போது அரசியலில் ஈடுபடாமலா இருக்கிறார்கள்? அவர்கள் தங்களுக்கான சங்கங்கள் மூலமாக ஆளும் அரசுகளுக்கு ஏற்றாற்போல் ஆதரவும்/எதிர்ப்பும் தந்து வருகிறார்களே.


saravan
ஜூலை 23, 2024 17:52

அப்ப எல்லோருக்கும் அரசு வேலை கொடுங்க


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 17:42

நிறைய தீவீரவாதிகள் காஷ்மீர் அரசுப் பணியில் இருந்தனர். வேலைக்கே வராமல் சம்பளம் மட்டும் வாங்கி அதை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தினர்.


karthik
ஜூலை 23, 2024 17:29

ஏற்கனவே மறைமுகமாக அரசியல் கட்சி சார்ந்து தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள்..அதுவே பெரிய தலைவலியாக இருக்கிறது.


என்றும் இந்தியன்
ஜூலை 23, 2024 17:24

அரசியல்வாதிகள் இன்று இல்லவே இல்லை இப்போது உள்ள எல்லோருமே அரசியல் வியாதிகள்


saravan
ஜூலை 23, 2024 17:00

ஏன் நடுநிலைமையாக இருப்பது பிடிக்கவில்லையா


RAJ
ஜூலை 23, 2024 17:00

நீதான் தோத்துட்டள. உன்ன எவன்லா பேட்டி எடுக்கியேன்..


Velayutham rajeswaran
ஜூலை 23, 2024 16:59

அரசியல் கட்சியா


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ