உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீ எங்க வேணாலும் போ; டாக்டர்களுக்கு மிரட்டல்; எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் திரிணமுல் நிர்வாகிகள்

நீ எங்க வேணாலும் போ; டாக்டர்களுக்கு மிரட்டல்; எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் திரிணமுல் நிர்வாகிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மிரட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் கொலை

கடந்த 9ம் தேதி மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் உடலில் ரத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரை பாலியல் பாலத்காரம் செய்து, கால் எலும்பை முறித்து, மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

போராட்டம்

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை கைது செய்து, தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் சங்கத்தினர் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறிக்கை

இளம்பெண் டாக்டரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

நம்பிக்கையில்லை

முன்னதாக, கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தந்தை, 'முதலில் முதல்வர் மம்தா பானர்ஜி மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், தற்போது இல்லை. இந்த சம்பவத்தில் அவர் நினைத்திருந்தால், பொறுப்பேற்று செயல்பட்டிருக்கலாம். ஆனால், அவர் ஒன்றுமே செய்யவில்லை' எனக் கூறியிருந்தார். இது ஆளுங்கட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்துவது போல் இருந்தது.

விரல்களை துண்டிப்பேன்

மேலும், 'இளம்பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கைகளை உயர்த்தினால், அவர்களின் கை விரல்களை துண்டிப்பேன்' என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் பெங்கல் உதயன் குஹா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மிரட்டல்

இந்த நிலையில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., அரூப் சக்ரபோர்த்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. டாக்டர்களின் போராட்டம் குறித்து பேசிய அவர், 'நீங்கள் வீட்டுக்கு போங்க அல்லது உங்களின் ஆண் நண்பருடன் எங்க வேண்டுமானாலும் போங்க. ஆனால், உங்கள் போராட்டத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்தாலும், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அப்போது, உங்களை நாங்கள் காப்பாற்ற மாட்டோம்,' எனக் கூறினார். எரிச்சல்திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யின் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு மேலும் எரிச்சலூட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh
ஆக 19, 2024 22:04

மம்தா கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதரவு முழுமையாக உள்ளது. அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் மெஜாரிட்டி ஆகி பல வருடங்கள் ஆயிற்று. இந்த முஸ்லீம்களில் பெருவாரியானவர்கள் வங்காள தேசத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மேற்கு வங்கத்தை இந்தியாவிலிருந்து பிரித்து தனி நாடாக மாற்ற முயன்று வருகின்றனர். அதனால் அங்கு மம்தா மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க முடியாது.


sridhar
ஆக 19, 2024 21:05

பணம் வாங்கிக்கொண்டு வோட்டு போடும் மக்களுக்கு அதன் விளைவுகள் தெரியல . திமுகவும் திரிணாமுல்லும் மக்கள் விரோதிகள்.


Ramesh Sargam
ஆக 19, 2024 19:41

திரிணமுல் கட்சியில் உள்ளவர்கள் எல்லோரும் ரவுடிகள், குண்டர்கள் போல நடந்துகொள்கிறார்கள். எல்லோரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும்.


தமிழன்
ஆக 19, 2024 17:16

மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறதா..? தூங்கி கொண்டு இருக்கிறதா?


மோகன்
ஆக 19, 2024 16:11

ஸ்டாலின் அரசும் தீதி அரசும் ஒரே விதமான விடியா அரசாக இருக்கிறது.


HoneyBee
ஆக 19, 2024 16:09

கனியக்கா / ஜோதிகா / மணியக்கா / இதுக்காவது வாயில இருக்கிற ?? எடுத்துட்டு பேசுங்க.


Venkatesan
ஆக 19, 2024 15:47

மேற்கு வங்கத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் போலீசாரின் நண்பர்கள் திட்டத்தில் மாநில அரசு வேலைக்கு எடுத்துள்ளது இந்த சஞ்சய் ராயும் ஒருவன். எந்த அடிப்படையில் மாநில அரசு இது போன்ற நபர்களை போலீசின் நண்பன் திட்டத்தில் வேலைக்கு எடுத்தது. திரிணமூல் நல்ல ஒரு மாமூல் கட்சி அவ்வளவே. வொண்ட வந்த பிடாரி திரிணமூல் ஊர் பிடாரியை உண்டியல் குலுக்கிகள் விரட்டியது தான் மிச்சம். திரிணமூல் போன்ற காட்சிகள் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெரும் கேடு.


தமிழ்வேள்
ஆக 19, 2024 15:42

அக்கா கட்சியில் கடைசி தொண்டனும் ஒரு குண்டநே ...என்னும்போது , அக்காவின் அமைச்சரவை சகாக்கள் , பயங்கரவாதிகள் ரேஞ்சுக்குத்தானே பேசுவார்கள் ? இந்த திருட்டு திரிசம கட்சியை ஒட்டுமொத்தமாக தடை செய்து உதை வெளுக்க எந்த சட்டமும் இல்லையா ?


GoK
ஆக 19, 2024 15:39

மனித நேயம் சற்றும் இல்லாத கம்யூனிஸ்டுகளை ஆதரித்த மக்கள், அவர்களை ஒத்த வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனித்தவர்கள் உணர்வார்கள் எந்த மாதிரி பண்பாடு அங்கே என்று. மக்கள் இல்லை மாக்கள்...அதுதான் உண்மை. நன்றி கெட்டவர்கள் நாகரீகம் அற்றவர்கள் இங்கே ஆள்பவர்களின் பங்காளிகள்.


ஆரூர் ரங்
ஆக 19, 2024 15:35

மற்ற மாநிலங்களிலிருந்து சிகிச்சைக்காக சென்னைக்கு வருபவர்களில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதம் வங்காளிகள்தான். அதன் காரணம் இப்போது புரிகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் திரிணாமுல் மூன்றும் ஒரு பெரிய மாநிலத்தை சுடுகாடாக ஆக்கிவிட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை