உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கமிஷனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையானது அல்ல: கொட்டும் மழையில் மம்தா பேச்சு

தேர்தல் கமிஷனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையானது அல்ல: கொட்டும் மழையில் மம்தா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: தேர்தல் கமிஷனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையான அரசு அல்ல என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டாவில் தர்மதலா என்ற இடத்தில், தியாகிகள் தினத்தை முன்னிட்டு நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். அப்போது கனமழை பெய்தது. பேரணியில் மழையில் நனைந்து கொண்டே, மம்தா பானர்ஜி பேசியதாவது:

38 சதவீதம்

தேர்ந்தெடுக்கப்பட்ட 38 சதவீத பெண் எம்.பி.க்களைக் கொண்ட ஒரே கட்சி திரிணமுல் காங்கிரஸ் மட்டும் தான். தேர்தலுக்கு முன் அரசியலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர். ஆனால் அதை செய்ய முடியவில்லை. 38 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த ஒரே கட்சி நாங்கள் தான். தேர்தல் கமிஷனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையான அரசு அல்ல.

விரைவில் கவிழும்

மத்தியில் பா.ஜ., ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. இது நிலையான அரசாங்கம் அல்ல. விரைவில் கவிழும். வெட்கமற்ற அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மற்றும் பிற வழிகளை தவறாகப் பயன்படுத்தி ஆட்சியில் தொடர்கிறது. விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எங்களை ஏமாற்ற முடியாது. மேற்குவங்கம் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

R.RAMACHANDRAN
ஜூலை 22, 2024 07:47

தேர்தல் ஆணையம் மட்டும் அல்ல இன்னும் சில மத்திய அரசின் அங்கங்களையும் பயன்படுத்தினர் என்பதை இவர் மறந்துவிட்டார்.


Kogulan
ஜூலை 22, 2024 04:12

இந்த அம்மா வரம்பு மீறி போவது தெரிகிறது


bgm
ஜூலை 22, 2024 03:54

ஏதோ வங்க புலிணங்க ! புலி புல்லை திங்குமா ? அவ்ளோ தில் இருந்தா எல்லா எம்பி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மறுபடியும் தேர்தல் நின்று வென்று காட்டுங்கள்


RAAJ68
ஜூலை 21, 2024 20:05

அராஜகத்தின் மொத்த உருவம் பேசுகிறது. வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை கள்ள ஓட்டு போடவைத்து திருட்டுத்தனமாக ஆட்சியில் அமர்ந்திருப்பது நீங்கள் தான். தேர்தலுக்குப் பின் நடந்த கலவரங்கள் பெண்கள் மீதான தாக்குதல்கள் பெண்களை சீரழித்த சம்பவங்கள் இதை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மத்திய அரசு மவுனமாக இருக்கிறது. இந்திரா காந்தி போன்று ஒரு பிரதம மந்திரி இருந்திருந்தால் உங்களை எப்போதோ கைது செய்து சிறையில் தள்ளி இருப்பார். மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அந்த தைரியம் இல்லை அது உங்களுடைய அதிர்ஷ்டம்.


theruvasagan
ஜூலை 21, 2024 17:39

இதுக்கு முன்னாடி ஓட்டு மெஷின் மேல் அபாண்டமாக பழி போட்டீங்க. இந்த தடவை எதிர்கட்சிகளுக்கு கூடுதல் சீட்டுகள் கிடைத்ததால் அந்த குற்றச்சாட்டு எடுபடாது என்று தெரிந்தவுடன் புதிதாக தேர்தல் ஆணையம் மேல் பழி. எதையாவது ஆதாரத்தோடு நிரூபித்தீர்களா. இதுதான் உங்க கூட்டாளி சொன்ன நேர்மையான அரசியலா.


Barakat Ali
ஜூலை 21, 2024 17:38

தேர்தல் கமிஷன் மானமுள்ளது என்றால் இந்தப் பேச்சுக்காக வழக்குத் தொடரலாம் .....


vikram
ஜூலை 21, 2024 17:37

இருக்கட்டும் சீட் ஒன்ஸ் என்ன ஆச்சு


Sundar R
ஜூலை 21, 2024 17:19

அமைதியாக இருந்த மன்மோகன் சிங்கையும், சகஜமாக சாதாரண குரலில் பேசும் மோடிஜியையும் பார்த்து விட்டு எப்படி உரத்த குரலில் அடுத்தவர்களைக் குற்றம் சொல்லியே வெற்றிகரமாக தொடர்ந்து அரசியல் காலேட்சேபம் நடத்துவது எப்படி என்பதை மம்தா பானர்ஜியிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பெண்மணியால் தனக்கும் தன் மாநிலமான மேற்கு வங்காளத்திற்கும் ஏதாவது ப்ரயோஜனமாக பாசிட்டிவாக என்ன செய்திருக்கிறார்? என்பதை கூர்ந்து நோக்குகிறோம். இது ராமாயண காலமாக இருந்தால் மம்தா ராவணனை சப்போர்ட் பண்ணி ராமரை எதிர்ப்பார். இவர் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பும் பின்பும் இந்திக்கூட்டணியில் ராகுலுக்கே கடுக்காய் கொடுத்தார். அதுதான் மம்தாவிடம் பாராட்டத்தக்க விஷயம்.


R.MURALIKRISHNAN
ஜூலை 21, 2024 16:18

நீர் இல்லாமல் மேற்கு வங்கம் இருக்கும்


சுராகோ
ஜூலை 21, 2024 15:51

தேர்தல் கமிஸ்ஸியனை பயன்படுத்தியிருந்தால் நீங்கள் cm illai


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி