உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.எஸ்.டி., துணை ஆணையர் சஸ்பெண்ட்

ஜி.எஸ்.டி., துணை ஆணையர் சஸ்பெண்ட்

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி கமிஷனர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர், தமிழகம், புதுச்சேரி மண்ட ஜிஎஸ்டி துணை கமிஷனராக பதவி வகித்தார். சேலத்தை சேர்ந்த விவசாயிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிதியமைச்சர் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்