UPDATED : மார் 08, 2024 05:04 AM | ADDED : மார் 08, 2024 12:53 PM
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது குவாசிம் குஜ்ஜார், 32. தற்போது, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வரும் இவர், தடை செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்.நம் நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள், குண்டு வெடிப்புகளில் இவருக்கு நேரடி தொடர்பு உள்ளது.நம் நாட்டுக்கு எதிரான தாக்குதல்களை ஒருங்கிணைப்பது, ஆயுத சப்ளை, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக ஆயுதங்களை சப்ளை செய்வதற்கான இடங்களை தேர்வு செய்வது, சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிப்பது, பணிப்பரிமாற்றம், எல்லைகளில் ஆயுத கடத்தல் உள்ளிட்ட நாச வேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.பயங்கரவாத எதிர்ப்பு சட்டமான, உபா எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக மத்திய அரசு இவரை அறிவித்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் 57வது பயங்கரவாதி இவர்.