உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் பாதிபேர் உடல் உழைப்பு இல்லாத சோம்பேறிகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பாதிபேர் உடல் உழைப்பு இல்லாத சோம்பேறிகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் பாதி பேர் போதிய உடல் உழைப்பு இல்லாததால், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள உடற்தகுதியை பெறவில்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் வயது வந்தவர்கள் மத்தியில் போதி உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2022ல் 49.4 சதவீதமாக உள்ளது. அதில், பெண்கள் 57 சதவீதம் பேர். ஆண்கள் 49 சதவீதம் பேர். உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2000 ல் 22.4 சதவீதமாக இருந்தது. இது குறித்து 195 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 12வது இடம் கிடைத்து உள்ளது.இது சரி செய்யப்படாமல் இருந்தால், 2030 ல் 59.9 சதவீதம் பேர் போதிய உடற்தகுதி இல்லாமல் இருப்பார்கள். இதனால், உடல்நலக்குறைவு மற்றும் நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.உலகளவில் 180 கோடி பேர் போதிய உடல் உழைப்பு இல்லாமல் உள்ளனர். பசிபிக் பிராந்தியத்தில் 48 சதவீதம், தெற்கு ஆசியாவில் 45 சதவீதம், மேற்கத்திய நாடுகளில் அதிகம் வருமானம் கொண்ட நாடுகளில் 28 சதவீதம் பேர் உடல் உழைப்பு இல்லாமல் உள்ளனர்.

பெண்கள்

போதிய உடல் உழைப்பு இல்லாத பெண்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் நாடுகள் உள்ளன. அதேநேரத்தில் வங்கதேசம், பூடான் மற்றும் நேபாளத்தில் பெண்கள் உரிய உடற்தகுதி உடன் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன

வயது வந்தவர்களுக்கு ஒரு வாரத்திற்கு 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பு அவசியம் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அவ்வாறு செய்யாதவர்கள், மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, மார்பக புற்று நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படக்கூடும் என எச்சரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

theruvasagan
ஜூன் 27, 2024 21:59

இந்தியாவில் பாதி பேர்தான். ஆனால் தமிழ்நாட்டில் முக்கால்வாசி பேர். மாடல் ஆட்சின்னா நம்பர் ஒன்தான்.


என்றும் இந்தியன்
ஜூன் 27, 2024 17:28

அரசியல்கட்சிகள் இலவசம் கொடுத்து மக்களை எப்படி சோம்பேறிகளாக்கி விட்டனர் என்று இந்த கருத்தின் மூலமாக மிக தெளிவாகத்தெரிகின்றது


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 17:22

உழைப்பின் பெருமையை உயர்த்திக் காட்டவே நூறு நாள் வேலைத் திட்டம் அமலாக்கப்படும் ஒரே நாடு பாரதம்.


ES
ஜூன் 27, 2024 16:15

100% True


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 16:10

மாதத்துக்கு 8500 ஆண்டுக்கு லட்சம் வாக்குறுதிகளை வீசுவது இதற்காகத்தான்.


Sivak
ஜூன் 27, 2024 15:58

ஓசில மாசம் ஆயிரம் ரூபாய் குடுத்தா கொஞ்சம் நஞ்சம் செய்த வேலையும் அம்போ தான் .... .. பெண்களுக்கு இலவச சினிமா திட்டம் ஏதாவது வெச்சிருக்கானுங்களா இந்த திருட்டு மாடல் காரனுங்க ...


duruvasar
ஜூன் 27, 2024 15:17

உரிமை தொகை , இலவச பஸ், வருடத்திற்க்கு 1 லட்சம் , இளைஞர்களுக்கு மாதம் 3600 இப்படி அள்ளி விட்டால் எவன் வேலைக்கு போவான். கருத்து போட 200 ரூபாய். இப்படி மக்களை சோம்பேறி ஆக்கும் ஆட்சியாளர்கள் உள்ள வரை இது தொடரும்.


Anantharaman Srinivasan
ஜூன் 27, 2024 15:10

100% உண்மையான தகவல். நினைத்தபோதெல்லாம் நினைத்ததை தின்று விட்டு ஏசி ரூமில் கம்பூட்டடர் முன் அமர்ந்திருப்பவர்கள் தான் அதிகம். ஏசி ரூமில் நாள் முழுவதும் அமர்ந்திருப்பதால் செரிமான பிரச்சனை ஏற்படும்.


Vathsan
ஜூன் 27, 2024 14:57

வங்க தேசம் பூட்டான் நேபால் அரசுக்கு வாழ்த்துக்கள். இந்தியா அரசு கட்டமைப்பை சரி செய்யவேண்டிய நேரம் இது.


sridhar
ஜூன் 27, 2024 13:38

திமுகவுக்கு எதிரான கருத்து - வன்மையாக கண்டிக்கிறேன்


மேலும் செய்திகள்