மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
மாண்டியா: ஹனுமன் கொடி இறக்கப்பட்டதை கண்டித்து, மாண்டியாவில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.மாண்டியா அருகே உள்ளது கெரேகோடு கிராமம். இந்த கிராமத்தில் கொடிக்கம்பம் அமைத்து, ஹனுமன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. ஆனால் அரசு அதிகாரிகள் அந்த கொடியை இறக்கினர். இதனை கண்டித்து கிராம மக்கள், ஹிந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், முதல்வர் சித்தராமையா பேனர் மீது கல்வீசப்பட்டதுடன், மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகாவின் பேனரும் கிழிக்கப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.இந்நிலையில் கர்நாடகா அரசை கண்டித்து, பிப்ரவரி 9ம் தேதி மாண்டியாவில் முழு அடைப்புக்கு, ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் கடைசி நேரத்தில் பா.ஜ., - ம.ஜ.த., முழு அடைப்பில் கலந்து கொள்ள மறுத்தது. இதனால் நேற்று ஹிந்து அமைப்பினர் முழு அடைப்பு நடத்தாமல், கெரேகோடு கிராமத்தில் இருந்து, மாண்டியா வரை பைக் பேரணி நடத்தினர். ஹிந்து அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து, மாண்டியாவில் கடைகள் அடைக்கப்பட்டன. மாலையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க, கெரேகோடு, மாண்டியாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago