உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹேமந்த் சோரன் கைது வழக்கு : உச்சநீதிமன்ற சிறப்பு பெஞ்ச் விசாரணை

ஹேமந்த் சோரன் கைது வழக்கு : உச்சநீதிமன்ற சிறப்பு பெஞ்ச் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்துள்ள மனுவை சிறப்பு பெஞ்ச் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது எழுந்த குற்றச்சாட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து இரவு ஹேமந்த் சோரனை கைது செய்தனர். முன்னதாக கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஹேமந்த் சோரன் வழங்கினார். இந்நிலையில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம், எனவும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரிப்பதற்கான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ், பெல்லா திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக பட்டியலிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mohan
பிப் 02, 2024 10:18

இந்தியாவில் பேருக்குத்தான் ஜனநாயகம் ...ஊருக்குத்தான் உபதேசம், அனால் நிலைமையோ பணநாயகம் ...பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் நம் நாட்டில் ..


பேசும் தமிழன்
பிப் 02, 2024 07:58

அத்தனை முறை சம்மன் அனுப்பியும்.... விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது ஏன் என்று கேளுங்கள் நீதிபதி அவர்களே !!!!


Kasimani Baskaran
பிப் 02, 2024 06:18

தங்கக்கூந்தல் போல மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், அதன் பின் உச்ச நீதிமன்றம் என்றல்லவா சென்றிருக்க வேண்டும் - ஆனால் விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதால் உடனே மூவர் பென்ச்....


Kasimani Baskaran
பிப் 02, 2024 06:16

மெட்ரோவுக்கும் இது நடக்கலாம்.


ராஜா
பிப் 02, 2024 05:02

பிறகு எதற்கு கைதுக்கு முன்னரே தானாக பதவியை ராஜினாமா செய்தார்? குற்றம் செய்ததால் பதவி எப்படியும் பறிக்கப்படும் என்று தெரிந்திருக்கிறது. ஆனாலும், நீதி மன்றத்தில் வழக்கு போட்டு நாடகம்.


Shankar
பிப் 01, 2024 23:12

ஊழல் செய்துவிட்டு விசாரணைக்கு பயந்து ஒழிந்திருப்பவனுக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் அவசர கதியில் விசாரணை. நாட்டின் நீதித்துறை ரொம்ப நல்லாதான் இருக்கு.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ