உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரவிந்த் கெஜ்ரிவாலை போல் விடுவிக்க ஹேமந்த் சோரன் கோரிக்கை

அரவிந்த் கெஜ்ரிவாலை போல் விடுவிக்க ஹேமந்த் சோரன் கோரிக்கை

புதுடில்லி,: தேர்தல் பிரசாரம் செய்வதற்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதுபோல், தனக்கும் அளிக்க வேண்டும் என, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், ஜன., 31ல் கைது செய்யப்பட்டார். நிலமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார்.மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், சமீபத்தில் நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஹேமந்த் சோரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை, கோடை விடுமுறைக்குப் பின் விசாரிப்பதாக அமர்வு கூறியது. அவசரமாக விசாரிக்கும்படி, ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கூறினார். வரும், 20ம் தேதிக்குப் பின் விசாரிப்பதாக அமர்வு கூறியது. ஆனால், அதற்கு முன் அவசரமாக விசாரிக்கும்படி, கபில் சிபில் வலியுறுத்தினார்.தேர்தல்கள் முடிந்துவிடும் என்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் அல்லது மனுவை தள்ளுபடி செய்யும்படி அவர் வாதிட்டார். அப்போது, டில்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். அதுபோல, ஹேமந்த் சோரனுக்கும் இடைக்கால ஜாமின் வழங்கும்படி அவர் வாதிட்டார்.இதையடுத்து, வழக்கின் விசாரணையை, 17ம் தேதிக்கு அமர்வு ஒத்திவைத்தது. அதற்குள் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Prabakaran J
மே 14, 2024 18:20

punish like vijay Malaya. Give soran passport...


Lion Drsekar
மே 14, 2024 12:51

வரவேற்கப்படவேண்டிய ஒன்று, நேற்றுதான் நான் பதிவு செய்திருந்தேன் இனி ஒவ்வொன்றாக புற்றீசல்போல் கோரிக்கை வரும், அவைகள் அனைத்துமே உடனடியாக நிறைவேற்றவும் செய்வார்கள் பிறகு வேறு என்ன இருக்கிறது இந்த திருநாட்டில் சிறைச்சாலைகள், நீதிமன்றம் காலியாக திரும்பும் இடமெல்லாம் நம் மக்கள்தான் இருப்பார்கள் ஜனநாயகத்தின் நிஜ வளர்ச்சியை நாம் இனி காணலாம் வந்தே மாதரம்


திராவிடன்
மே 14, 2024 11:39

அப்டியே, ஹிந்து இல்லாத, பாஜக இல்லாத எல்லா திருடண் கொலைகாரன்களுக்கும் அண்ணா பொறந்த நாள்ள விடுதலை கொடுங்க


ஆரூர் ரங்
மே 14, 2024 11:08

வெறுமனே விசாரித்து விடுதலை செய்தாலும் போதாது. மேன்மை தங்கியவர்களின் சார்பில் மாலையும் அணிவித்து வழியனுப்பி வைக்கலாம். நாட்டைக் காப்பது நீதிமன்றங்களின் பணி என்று அரசியல் சட்டத்தில் இல்லையே?


ஆரூர் ரங்
மே 14, 2024 11:04

அரசியல் சட்டம் பற்றியவை போன்ற அதிமுக்கிய வழக்குகளை மட்டுமே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அமைக்கப்பட்டதாகப் படித்திருக்கிறேன். ஆனால் பெஞ்ச் கோர்ட் லெவலுக்கு சாதாரண பெட்டி கேசு, அடிதடி, ஜாமீன் வாக்குகளையே அதிகம் விசாரிக்கிறார்கள் போலுள்ளதே. விசாரிக்கும் வழக்குகளின் தரத்துக்கேற்ற சம்பளம் கொடுத்தால் போதுமா?


Ramanujadasan
மே 14, 2024 10:15

தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது உச்ச நீதி மன்றம் ஊழல்வாதி கெஜ்ரிவாலின் இடைக்கால பிணையின் மூலம், இனிமேல் ஒவ்வொரு ஊழல்வாதியும் இதையே காரணம் காட்டி பிணை கேட்பார் கேவலம் மற்றும் கொடுமை


theruvasagan
மே 14, 2024 09:53

வருஷக் கணக்காக இழுத்துக் கொண்டிருக்கும் சாமானியர் வழக்குகளை எல்லாம் பரண் மேல ஏத்தியாகி விட்டது. தற்சமயம் நீதிபரிபாலனத்தின் அதி முக்கிய குறிக்கோள் ஜாமீன் வழங்கல் மட்டும்தான்.


theruvasagan
மே 14, 2024 09:49

ஜாபர் கூட ஜெயில்ல இருந்தா தன்னோட வியாபாரம் நொடித்து போய்விடும்னு மனு கொடுக்கலாமே. அதற்கு வாதாட கப்பல் சிப்பலை கூப்பிட்டா அவரும் ரெடியா வருவாருல்ல. ஊழல் குற்றவாளிகள் அம்புட்டு பேருக்கும் ஜாமீன் வழங்க ஒற்றை சாளர முறை ஏற்பாடு பண்ணிட்டாங்க போல இருக்கே.


Bharathi
மே 14, 2024 08:09

Pls consider senthil Balaji also... Better they can form an association for bail seeking political


vadivelu
மே 14, 2024 06:27

யாருக்கும் வெட்கம் இல்லை சாமானியனுக்கும் பிரிதம மந்திரிக்கும் நீதி சமமாக இருக்கணும் சோரன் ஜாமீன் கேட்பதில் தவறில்லை, தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்ய , தேர்தல் பணிகள் செய்ய, ஒட்டு போட ஜெயிலில் இருப்போர் வெளியே வர ஜாமீன் கேட்பார்கள் தேர்தல் முடிந்ததும் அவர்களாகவே ஜெயிலில் சென்று உட்கார்ந்து கொள்வார்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை