உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களை ஒதுக்கும் ஹிமாச்சல் அரசியல்: 3 பேர் மட்டுமே வெற்றி

பெண்களை ஒதுக்கும் ஹிமாச்சல் அரசியல்: 3 பேர் மட்டுமே வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த 72 ஆண்டு வரலாற்றில், லோக்சபா தேர்தலில் மூன்று பெண்கள் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறை நடக்க உள்ள தேர்தலில், இரண்டு பெண்கள் களமிறங்க உள்ளனர்.ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நான்கு லோக்சபா தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது.பிரதான கட்சிகள் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளன. இவற்றில், மண்டி தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக பிரபல பாலிவுட் நடிகை கங்கனாவும், கங்க்ரா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ரேகா ராணியும் மட்டுமே பெண் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.ஹிமாச்சல பிரதேசத்தில் ஓட்டளிக்க தகுதியுடைய மொத்த வாக்காளர்களில் பெண்கள் 49 சதவீதம் பேர் உள்ளனர். இருப்பினும், இரண்டு கட்சிகள் மட்டுமே பெண் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இதற்கு முன், 1952, 1984 மற்றும் 2004ல் காங்., சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
மே 09, 2024 09:26

இந்த தலைப்பே பெண்ணடிமையை தூண்டிவிடும் வகையில் உள்ளது எவரும் வேட்பாளரை பார்த்து ஒட்டு போடுவதில்லை


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி