மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10
தங்கவயல்: தங்கவயல் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள சமூக நலத்துறையின் மாணவர் விடுதி மாணவர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்கவயல் சாமிநாதபுரம் மாணவர்கள் விடுதியில் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை. இதை குடித்த சில மாணவர்கள், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் சிகிச்சை பெறுவதற்காக அவரவர் வீடுகளுக்கு சென்றுஉள்ளனர்.இந்நிலையில் மற்ற மாணவர்கள், தங்களுக்கு சுத்தமான குடிநீர், குளிக்க வெந்நீர், நேரத்திற்கு சுவையான உணவு, சீரான கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.தகவல் அறிந்த வந்த சமூக நலத்துறை அதிகாரி சீனிவாச ரெட்டி, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
3 hour(s) ago | 10