உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமறைவான ஜாகிர் நாயக் எப்படி வழக்கு தொடர முடியும்? உச்ச நீதிமன்றம் கேள்வி

தலைமறைவான ஜாகிர் நாயக் எப்படி வழக்கு தொடர முடியும்? உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி :பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, ஒரே வழக்காக இணைக்கக் கோரி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்ட ஒருவர், அனைத்து வழக்குகளையும் இணைக்கக் கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?' என, மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், 58, கடந்த 2012ல், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சர்ச்சை கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.தப்பியோட்டம்நம் அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்காவில், 2016 ஜூலையில் ஹோட்டல் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததை தொடர்ந்து, ஜாகிர் நாயக் நாட்டை விட்டு தப்பியோடினார்.இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு குண்டு வெடிப்பை நடத்தியதாக ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாகிர் நாயக் மீதான பயங்கரவாதத்துக்கு ஆள் திரட்டியது, நிதி வழங்கியது தொடர்பான வழக்குகளை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. நம் நாட்டை விட்டு தப்பியோடியதால், ஜாகிர் நாயக்கை தப்பியோடிய நபராக மத்திய அரசு அறிவித்தது.இதற்கிடையே, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சர்ச்சை கருத்து தெரிவித்ததாக, பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை, ஒரே வழக்காக இணைக்கக் கோரி, மத போதகர் ஜாகிர் நாயக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அஹ்சானுதீன் அமானுல்லா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்ட ஒருவர், அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்?' என, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பிரமாண பத்திரம்இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, ''இந்த வழக்கை திரும்ப பெறுவதாக ஜாகிர் நாயக் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்,'' என்றார். ஜாகிர் நாயக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக எனக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை' என்றார். இதை கேட்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெறுகிறீர்களா, இல்லையா என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி, ஜாகிர் நாயக் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.மேலும், இது தொடர்பாக பதிலளிக்கும்படி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டு, வழக்கை, வரும் 23க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Rasheel
அக் 18, 2024 18:37

இங்கே சிலபேர் காட்டுமிராண்டி மத சட்டங்களை கொண்டு வாருங்க என்று வரிசையில் நீர்ப்பானுக


Lion Drsekar
அக் 18, 2024 07:45

இவர் மலேசியாவில் அரசு விருந்தினராக இருக்கிறார், வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களுக்கு கொடுக்கப்படும் வாகனம், பாதுகாப்பு , அப்படி இருக்க, செய்தியை மட்டும் படித்துவிட்டு அப்போதே நினைவில் இருந்து கருத்துக்களை அகற்றுவதே நல்லது, விழலுக்கு இறைத்த நீர், வந்தே மாதரம


Parasumanna Sokkaiyer Kannan
அக் 17, 2024 15:07

Our constitution support criminals. It is dare necessary to bring capital punishment laws.


Yaro Oruvan
அக் 17, 2024 14:24

யாரிந்த பிஞ்சுபோன பிரஷ் தலையன் ... வாய வச்சிக்கினு கம்முன்னு இருக்க மாட்டானுவ போலருக்கு


Ganesun Iyer
அக் 17, 2024 13:50

அண்ணாவா யாரு அது எங்களுக்கு உடையண்ணவைதான் தெரியும்..


Subash BV
அக் 17, 2024 13:16

We dont have a banana world. There are various agencies to bring criminals back to their country. ORDER ACCORDINGLY. ELSE TOO MANY SUCH CRIMINALS WILL POP UP DAILY.


veeramani
அக் 17, 2024 09:52

ஜாகிர் நா யாக் வக்கீலை முதலில் தண்டியுங்கள். இவரின் வக்கீல் தொழில்செய்வதை நிறுத்துங்கள், ஆதார், பாண், இந்திய வோட்டு சிட்டு அனைத்தையும் பத்து வருடங்களுக்கு சஸ் பண்ட் செய்யுங்கள்


Dharmavaan
அக் 17, 2024 07:17

தப்பியோடியவன் எப்படி வழக்கு என்று மத்திய அரசிடம் கேட்பது சரியா அவன் வழக்குரைஞரிடம் கேட்பது சரியா கேவலமான நீதி


Palanisamy T
அக் 17, 2024 09:59

தம்பி, நீதித்துறையை அப்படியெல்லாம் பேசக் கூடாது. வேண்டுமென்றால் முடிந்த வழக்குகளை விமர்சனம் செய்யலாம். இங்கே வழக்குப் போட்டது குற்றம் சாட்டப் பட்டவன். மத்திய அரசு போடவில்லை. நீதிமன்றம் கேட்டது சரிதான். நீதித் துறையை நம்பவேண்டும். மதிக்கவும் வேண்டும் .


Anand
அக் 18, 2024 12:24

தர்மவான் கருத்து சரிதான், தப்பியோடினவன் தான் வழக்கை தொடர்ந்துள்ளான், அவனிடம் தான் நீதிமன்றம் "தப்பியோடிய நீ எப்படி வழக்கு தொடரலாம்" என கேட்கவேண்டும், மாறாக அவனை தேடிக்கொண்டிருக்கும் எதிர் மனுதாரராகிய மத்திய அரசை பார்த்து எப்படி வழக்கு தொடரலாம் என கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம்?


Barakat Ali
அக் 17, 2024 07:06

மனிதனால் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச்சட்டங்கள் கேலிக்குரியவை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது ...... ஷரியத் மட்டுமே தீர்வு ......


N.Purushothaman
அக் 17, 2024 07:53

உங்க வாதப்படி இந்தியாவுல ஷரியத் சட்டம் கொண்டு வந்துட்டோம்ன்னு வச்சிக்கோங்க. ...இப்போ அந்த சட்டப்படி அந்த ஆளுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்கன்னு சொல்லுங்க .....


Palanisamy T
அக் 17, 2024 10:45

நடப்பது "சிவில் சட்டம்". அதாவது மக்களுக்கான பொதுசட்டம். பொதுச் சட்டமென்றே சொல்லலாம். பல தரப்பட்ட்ட மக்கள், பல இனங்கள், மொழி, கலாச்சாரங்கள் மதங்களென்று இப்படிப் போய்க் கொண்டேயிருக்கும். இங்கே குறுகிய மனம்கொண்டு மதச் சட்டத்தை உள்ளே திணிக்கக்கூடடாது. இப்போது ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் நீங்கள் நினைக்கின்ற இந்தச் சட்டங்களால் மக்கள் அவதிப்பட்டு கேலிக்குரியதானதை உலகம் ஏற்றுக் கொண்டதா?


Barakat Ali
அக் 17, 2024 11:32

டியர் புருஷோத்தமன், விஷயம் தெரிஞ்சுதான் கேட்கறீங்க போல .... இஸ்லாத்தில் இருந்து மாற்றுமதம் செல்லத்தான் மரண தண்டனை .... மாற்று மதம் சென்றவர் மனம் வருந்தி இஸ்லாத் திரும்பினால் மன்னிக்கப்படலாம் ... இஸ்லாத்துக்கு வர தண்டனை எதுவும் குறிப்பிடப்படவில்லை .... அவரவர் விருப்பம் ......


Barakat Ali
அக் 17, 2024 11:38

இஸ்லாத்துக்கு மாற்றுபவர்களுக்கு ஷரியத் படி தண்டனை கிடையாது .... அதே சமயம் ஜாகிர் நாயக் யாரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றவில்லை... இஸ்லாமிய இளைஞர்களிடையே தீவிரவாதத்தை விதைத்தார் என்ற குற்றச்சாட்டு பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இருந்தது... அப்போதெல்லாம் பாஜக ஏன் கண்டுகொள்ளவில்லை??


Ganesh Subbarao
அக் 17, 2024 13:10

ஹா ஹா ஹா


Barakat Ali
அக் 17, 2024 14:16

இஸ்லாத்துக்கு வர தண்டனை எதுவும் குறிப்பிடப்படவில்லை .... அவரவர் விருப்பம் ...... பரக்கத் ஜனாப் ..... மாற்றான் இசுலாத்துக்கு மாறி வருவதே ஒரு தண்டனைதான் .....


Barakat Ali
அக் 17, 2024 14:17

பரக்கத் ஜனாப்.. இசுலாத்துக்கு மாறி வருவதே தண்டனைதான் என்கிறார் ஒரு மாற்றுமத அன்பர்.. புரிதலின்மையால் விளையும் கொடுமை இது ......


Dharmavaan
அக் 17, 2024 07:05

2012 ல் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் விசாரிப்பது பற்றி முடிவாகவில்லை கேவலமான நீதித்துறை யார் கேட்பது.மோடி துணிந்து முடிவெடுத்து நீதி சுதந்திரத்தை பரிசீலனை செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை