உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பத்திரம் மூலம் மாநில கட்சிகள் பெற்றது எவ்வளவு?

தேர்தல் பத்திரம் மூலம் மாநில கட்சிகள் பெற்றது எவ்வளவு?

புதுடில்லி: தேர்தல் பத்திரம் மூலம் மாநில கட்சிகள் ரூ.5,221 கோடி நன்கொடை திரட்டியது தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்கள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இதன்படி, பா.ஜ., மட்டும் 6,060.51 கோடி ரூபாய் நன்கொடை திரட்டி உள்ளது. காங்கிரஸ் ரூ.1,421.86 கோடி ரூபாயும், ஆம் ஆத்மி 65.45 கோடியும் நன்கொடை வசூலித்த நிலையில், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் எந்த நன்கொடையும் வசூலிக்கவில்லை.

மாநில கட்சிகள்

இந்நிலையில், மாநில கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த நன்கொடை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மாநில கட்சிகள் ரூ.5,221 கோடி ரூபாய் நன்கொடை வசூலித்து உள்ளன. இது பாஜ., வசூலித்த தொகையை விட ரூ.839 கோடி மட்டுமே குறைவாகும்.அதில்திரிணமுல் காங்கிரஸ் ரூ.1609.53 கோடிபிஆர்எஸ் கட்சி ரூ.1,214.70 கோடிபிஜூ ஜனதா தளம் ரூ.775.50 கோடிதிமுக., ரூ.639 கோடிஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.337 கோடிதெலுங்கு தேசம் ரூ.218.88 கோடிராஷ்ட்ரீய ஜனதா தளம் ரூ.73.5 கோடிமதசார்பற்ற ஜனதா தளம் ரூ.43.40 கோடிசிக்கிம் கிராந்திகாரி கட்சி ரூ.36.5 கோடிதேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.31 கோடிஜனசேனா கட்சி ரூ.21 கோடிசமாஜ்வாதி கட்சி ரூ.14.05 கோடிஐக்கிய ஜனதா தளம் ரூ.14 கோடிஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா ரூ.1.3.5 கோடிஅகாலி தளம் ரூ.7.2 கோடிஅதிமுக ரூ.6.05 கோடிசிக்கிம் ஜனநாயக முன்னணி ரூ.5.5 கோடிமஹாராஷ்டிராவாடி கோமந்தக கட்சி, காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, கோவா முன்னணி கட்சி ஆகியன ரூ.1 கோடிக்கு குறைவாகவே தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Dharmavaan
மார் 16, 2024 07:18

இதை வெளியிட சொன்னது கோர்ட்டின் வரம்பு மீறிய தனி மத சுதந்திரத்தை நசுக்கும் செயல்


D.Ambujavalli
மார் 16, 2024 04:06

ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றைக்கட்டி. இறைக்க மாட்டார்கள் யார், யாருக்கு எவ்வளவு கொடுத்தார் என்ற விவரம் வந்தாலே அவர்கள் பெற்ற 'பிரதிபலன்' தெரியும் அதானி, அம்பானி எல்லாம் லிஸ்டில் வராமல் தனியாகக் 'கவனித்தது' இந்த ஆறாயிரம் கோடிக்கு மேலே இருக்கும் அது 'பத்திரமாக' பெரிய இடங்களை சேர்ந்திருக்கும்


ஆரூர் ரங்
மார் 16, 2024 13:22

ஒரே ஒரு வீட்டை நாட்டுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு நாட்டையே ஆட்டையை போட்ட குடும்பத்தைத் தெரியுமா?


sankaranarayanan
மார் 15, 2024 21:11

இனி வங்கிகளில் பணம் போட்டவர்கள் லிஸ்டையும் உச்ச நீதி மன்ற வெளியிடும்படி வங்கிகளுக்கு ஆணை பிறப்பித்தாலும் பிறப்பிக்கலாம் ஏனெனில் அவர்கள் உச்ச நீதி மன்றம் வானளாவிய அதிகாரம் பெற்றவர்கள் அவர்கள் பாராளுமன்றத்தையே கலைக்கவும் கலைக்கலாம் கூட்டவும் செய்யலாம் இதுதான் இந்திய ஜனநாயகத்தின் தனி சிறப்பு


Dharmavaan
மார் 16, 2024 07:12

இது நடக்கும் .கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும் அதுவே தீர்வு


Apposthalan samlin
மார் 16, 2024 11:05

இது தான் ஜனநாயகம் எல்லாம் வெளிப்படையாக தான் இருக்க வேண்டும்


Apposthalan samlin
மார் 16, 2024 11:13

கஸாலி கெண்டை அயிரை பொடுசுகள் எல்லாம் மாட்டிக்கிருச்சு ஆனால் மூணு சுறா மீன் தப்பித்து விட்டது அதையும் பிடித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் .


Kalyan Singapore
மார் 15, 2024 21:09

லாட்டரி அரசன் சாண்டியாகோ மார்ட்டின் வாங்கிய பத்திரங்கள் 1600 கோடிக்கு மேல். அவர் மருமகன் அர்ஜுன் யாதவ் திமுகவின் தேர்தல் உத்தி தலைவர் ( முந்தைய தேர்தல் உத்தி தலைவர் பிரசாந்த் கிஷோர் அவ்வளவு பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும்.) அப்படி உத்தி தலைவருக்கு கொடுக்கும் தொகை லாட்டரி அரசன் கொடுத்ததாக இருக்கும் . தேர்தல் பத்திரங்கள் எண்கள் தொடர்பான அறிக்கை வரும்போது யார் கொடுத்தார்கள் யார் பெற்றார்கள் என்பதெல்லாம் தெரிய வரும் . ( கொடுத்தவர்களின் அம்பானியோ அடானியோ டாடா வோ இல்லை அனா அறிகிறேன் )


Godfather_Senior
மார் 15, 2024 20:07

எந்த தொழிலதிபரும், எதற்கும் தொல்லை கொடுக்கும் பிற்போக்குவாதிகளான கம்யூனிஸ்டுகளுக்கு டொனேஷன் கொடுக்க மாட்டார்கள் ஆனால் அதையே அவர்கள் தங்கள் தோழமை கட்சிகளிடம் வசூலித்து விடுவார்கள் . இப்படித்தான் திமுக வும் கம்யுஊனிஸ்டுகளுக்கு இருபத்தி ஐந்து கோடி கொடுத்துள்ளது . மற்ற காட்சிகள் வசூல் வேட்டையில் தாங்கள் தோல்வியடைந்துள்ள வயிற்எரிச்சலில் , கோர்ட்டில் கேஸ் போட்டு தங்கள் தோழமைகல் மூலம் தங்கள் வயிற்ரஎரிச்சலை தீர்த்துக்கொண்டுள்ளனர் . வரும் தேர்தலை கம்யூனிட்டுகள் ஒருவரும் பார்லிமென்டில் இருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம் தேர்தல் நேரங்களில் ரைடு மூலம் பிடிபடும் பணத்தை திருப்பித்தர முடியாமல் சட்டம் வழி வகுக்குமானால் அரசுக்கு ஏராளமான பணம் சேரும் செய்வார்களா ?


Godfather_Senior
மார் 15, 2024 19:47

அநேகமாக, தேர்தலுக்குப்பிறகு, மாநில கட்சிகளே இருக்காது எனும் சூழ்நிலை உருவாகும். ஆக, எதிர்காலங்களில் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் நிதி கொடுக்கும்படி இருக்கலாம் . அதையும் இனிமேல் பணமாகவே வழங்கலாம் என உச்ச நீதி மன்றம் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ராகா , சோகா , பசி கிட்டே இருக்கிற கறுப்பெல்லாம் பின்ன எப்படி வெளுக்கிறதாம் ?


Kasimani Baskaran
மார் 15, 2024 19:10

பாண்டுகள் மூலம் பெற்றது. நேரடியாக போதைப்பொருள் கடத்தல்க்காரர்கள் கூட தீம்காவுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். அந்தத்தகவல்களை மட்டும் கட்சிகள் மறைப்பது தவறுதானே? ஆகவே அரசியல் கட்சிகளின் வரவு செலவு விபரங்கள் கூட பொது வெளியில் இருக்க வேண்டும்.


கனோஜ் ஆங்ரே
மார் 15, 2024 19:56

சரி சாமி... நீங்க சொல்றது சரின்னே வச்சிக்குவோம்... உங்க கட்சிக்கு மட்டும் ஆறாயிரம் கோடி எதுக்கு கொடுத்தாங்க... ஏன் கொடுத்தாங்க... ஆளுங்கட்சிக்கு ஆறாயிரம் கோடி... இந்தியாவில் உள்ள எல்லா 21 எதிர்க்கட்சிக்கு எல்லாம் சேர்த்து நாலாயிரம் கோடியா...?


Dharmavaan
மார் 16, 2024 07:15

வியாபாரம் செய்ய உகந்த சூழ்நிலை பிஜேபியால் மட்டுமே தரமுடியும் என்று விரும்பி கொடுத்தார்கள்


Kasimani Baskaran
மார் 16, 2024 10:11

"உங்க கட்சிக்கு மட்டும் ஆறாயிரம் கோடி" - கும்மிடிப்பூண்டியை தாண்டாத திராவிடக்கட்சிக்கு பல நூறு கோடி கிடைக்கும் பொழுது தேசியக்கட்சியான அசுர பலத்துடன் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு அதிக நன்கொடை வரத்தான் செய்யும்.


GMM
மார் 15, 2024 18:48

நன்கொடையாளர் வங்கி விவரம் RBI அனுமதி இல்லாமல் SBI வெளியிட்டது தவறு. 50 கோடி வாடிக்கையாளர்கள் நம்பிக்கை பெற நீதிமன்ற தண்டனை ஏற்று இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசன அமைப்பு. நீதிமன்ற கோரிக்கைக்கு கட்டுப்பட்டு, விவரம் வெளியிட்டது சரியல்ல. பதிவு பெற்ற கட்சிகள் அறிக்கை கேட்டு இருக்க வேண்டும். SBI, EC அரசு துறையை தன் சொந்த முதலீட்டு துறை போல் கையாள்வது நல்லது அல்ல. நன்கொடை பணத்தை கட்சிகள் செலவிட்ட விவரம் வெளிப்படை தன்மைக்கு வேண்டா?


கனோஜ் ஆங்ரே
மார் 15, 2024 19:54

///50 கோடி வாடிக்கையாளர்கள் நம்பிக்கை பெற நீதிமன்ற தண்டனை ஏற்று இருக்க வேண்டும்./// மவனே. ... சிக்குன உடனே, என்னென்ன சொல்றீங்கப்பா...? ஏய்யா... வெண்ணை திங்குறவ ஒருத்தன்... விரல் சூப்புறவன் ஒருத்தனா...? என்னங்க நியாயம்...?


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 15, 2024 18:42

28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 38 மாநிலங்களில் கட்சி நடத்த பிஜேபி பெற்ற நன்கொடை 6,060.51 கோடி. அதாவது சராசரியாக ஒரு மாநிலத்திற்கு பிஜேபி பெற்ற நன்கொடை 168.35 கோடி. மம்தா கட்சி மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் இருக்கும் மம்தா பெற்ற நன்கொடை 1609.53 கோடி, தெலங்கானாவில் பிஆர்எஸ் பெற்றது 1,214.70 கோடி, ஒரிசாவில் பிஜூ ஜனதா தளம் பெற்றது 775.50 கோடி. நம்ம ஊரில், ஒரே ஒரு மாநிலத்தில் 75 வருடமாக குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் திமுக பெற்றது 639 கோடி... 168.35 கோடி எங்கே, 639 கோடி எங்கே? பிஜேபியை விட 380 சதவிகிதம் அதிகம்.


கனோஜ் ஆங்ரே
மார் 15, 2024 19:53

சிக்குன உடனே... என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றாம் பாருங்க... இதுபோலத்தான், இவனுங்க இன்னும் ரெண்டு மாசத்துல தோத்த உடனே... ஏய்யா, தோத்தீங்க...ன்னு கேட்டா... “வாக்கு சதவிகிதம் அதிகம் பெற்றுள்ளோம்”...நிலாவுல ஆயா வடை சுட்ட கதை சொல்லுவானுங்க பாருங்க... அது மாதிரி என்னென்ன சொல்றாம் பாருங்க...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை