உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "நான் தப்பா பேசல : சொல்றார் பிரணாப்

"நான் தப்பா பேசல : சொல்றார் பிரணாப்

புதுடில்லி : ''அன்னா ஹசாரேயின் உடல் நிலை குறித்து, தவறாக எதுவும் நான் கூறவில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். லோக்சபாவில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ''நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 'அன்னா ஹசாரேயின் உடல் நிலை குறித்து, அரசுக்கு கவலை இல்லை; அவரது ஆதரவாளர்களுக்குத் தான் கவலை' என, கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்றார்.

இதற்கு பதில் அளித்த பிரணாப் முகர்ஜி கூறியதாவது: நான் ஒருபோதும் அப்படி கூறவில்லை. நான் கூறியதை திரித்து வெளியிட்டு விட்டனர். ஹசாரே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான், அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்; நாங்களும் அதைத் தான் விரும்புகிறோம். ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி