உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதிலடி கொடுப்பேன்!

பதிலடி கொடுப்பேன்!

பார்லிமென்டுக்கு நாய்க்குட்டியை அழைத்து வந்ததற்காக, எனக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். தீர்மானம் வரும் போது அதற்கு தக்க பதிலடி கொடுப்பேன். பா.ஜ.,வின் மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். ரேணுகா சவுத்ரி ராஜ்யசபா எம்.பி., - காங்.,

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்!

போலி செய்திகள் மிகவும் தீவிரமான பிரச்னை. அவை, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், போலி செய்திகள், வீடியோக்களை உருவாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி செய்திகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே அமைச்சர், பா.ஜ.,

ஏற்க முடியவில்லை!

காலஞ்சென்ற தலைவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு தினத்தில், அவர்களின் நினைவிடத்துக்குச் சென்று இனி மரியாதை செலுத்த மாட்டேன். நான் செல்லும் போது மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதால், இந்த முடிவை எடுத்துள்ளேன். எனக்காக மக்கள் கால்கடுக்க காத்திருப்பதை ஏற்க முடியவில்லை. மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி