உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் இறந்த நதிக்கு உயிர்கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி

உ.பி.,யில் இறந்த நதிக்கு உயிர்கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி

லக்னோ: உ.பி.,யில் சம்பய் மாவட்டத்தில் இறக்கும் நிலையில் இருந்த நதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி முயற்சியால் சீரமைக்கப்பட்டது.

குடிநீர் ஆதாரம்

உ.பி., மாநிலம் சம்பய் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக சோட் என்ற நதி இருந்தது. கங்கை நதியின் துணை நதியாக இது இருந்தது. அம்ரோஹா மாவட்டத்தில் துவங்கி 110 கி.மீ., தூரம் பயணித்து பதுவான் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. அம்மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய தேவையை பூர்த்தி செய்வதாகவும் திகழ்ந்தது. ஆனால், நாட்போக்கில் ஆக்கிரமிப்பு காரணமாகவும், அதனை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாத காரணத்தினாலும் இந்த நதி ஓடையை போல் சுருங்கி இறக்கும் தருவாயில் இருந்தது. விவசாயிகள் நிலத்தடிநீரை பயன்படுத்த துவங்கினர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது. இது அப்பகுதி மக்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.

4 கட்டம்

இந்நிலையில், மணீஷ் பன்சால் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். நதி இறக்கும் நிலையில் இருந்தது அவரின் கவனத்திற்கு சென்றது. அந்த நதியை உயிர்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து 4 கட்டங்களாக புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.முதல் கட்டமாக, நதியின் இயற்கையான நீரோட்டம் ஆய்வு செய்யப்பட்டது.இரண்டாவதாக, நதியின் நீளம், அகலம் பற்றி அறிந்து எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.3வதாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.4வதாக ஆற்றில் இருந்த மணல் அகற்றப்பட்டு, அது புதுப்பிக்கப்பட்டது. ஆற்றை தூய்மைப்படுத்தி, ஆழப்படுத்த தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மரக்கன்று

இதன் காரணமாக, ஆற்றை புதுப்பிப்பதற்காக டிச.,2022 ல் துவங்கிய பணி 6 மாதங்களில் 2023 ஜூன் மாதம் நிறைவு பெற்றது. இதன் காரணமாக, கடந்த பருவமழை காலத்தில் நதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி, அதன் பழைய நிலையை எட்டியது. அப்பகுதியில் தண்ணீர் தேங்குவதும் தடைபட்டது.மேலும் நதிக்கரையோரம் எதிர்காலத்தில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க மூங்கில் மரக்கன்று நடப்பட்டது.

பிரதமர் பாராட்டு

மாவட்ட கலெக்டரின் இந்த பணியை 2023 செப்., மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசினார். இந்த திட்டத்தின் வெற்றியை மக்களுக்கும், மாவட்ட ஊழியர்களுக்கும் சமர்ப்பித்த கலெக்டர், கடந்த ஜூன் மாதம் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோன்ற சிறப்பான பணியை செய்ய வேண்டும் என அம்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

aaruthirumalai
ஆக 01, 2024 19:16

இந்த மாதிரி தமிழ்நாட்டில்...


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 18:38

அரசியல்வியாதிகள் தலையீடு இல்லையென்றால் ஐ ஏ எஸ் அதிகாரிகள் சாதிப்பார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் .......


வாய்மையே வெல்லும்
ஆக 01, 2024 17:46

மாடல் அரசு இந்த பாடத்தை எல்லாம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது . இவங்களும் இன்னொரு எதிர் திராவிட கட்சிகளுக்கு ஒரே ஒற்றுமை எவன் முதலில் கள்ளத்தனம் செஞ்சு காசை ஆட்டய போடுவது. கடந்த அறுவது வருடத்தில் மக்களை துயரத்தில் ஆழ்த்தியது இரண்டு திராவிட காட்சிகளே. வெட்கி தலைகுனியவேண்டிய தருணம் .


Anu Sekhar
ஆக 01, 2024 17:46

இந்த மாதிரி ஒவ்வொரு மாவட்டங்களிலும் நேர்மையான இளைஞர்களை ஊக்குவியுங்க. Bring in the best and enthusiastic collectors and officers and keep the politicians away....


Tiruchanur
ஆக 01, 2024 16:53

கிரேட். அவரது வம்ஷம் வ்ருத்தியாக பகவானை பிரார்த்திக்கிறேன்


D.Ambujavalli
ஆக 01, 2024 16:24

இங்கு ஆறு குளங்கள் இருந்த இடங்களே மறைந்து அவை சமாதியாகி, மேலே அடுக்கு மாடி, மால், அரசு அலுவலகம் என்று ‘நினைவிடங்களாக’ மாற்றிவிட்ட பிறகு எந்த கலெக்டர் வந்தாலும் மீட்க முடியாதே அந்த ‘மீட்பருக்கு ‘ பாராட்டுக்கள்


Arunachalam Saptharishi
ஆக 01, 2024 16:15

மிகவும் முக்கியமான செயல் பாராட்டுகள்


Kalyanaraman
ஆக 01, 2024 14:44

தலை சரி இருந்தால் மற்றதெல்லாம் சரியாக இருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் சரியாக இருப்பதால்தான் கலெக்டெர்களும் சரியாக வேலை பார்க்கிறார்கள். தமிழ்நாட்டிற்கும் உடனடியாக ஒரு யோகி ஆதித்யநாத் தேவை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 01, 2024 13:06

தயவுசெய்து இதேபோல் நொய்யல் நதியையும் மீட்டெடுக்க வேண்டும். இதுவும் அழியும் நிலையில் உள்ளது. கெளசிகா நதியையும் மீட்டெடுக்க வேண்டும். கோவை பழைய நிலைக்கு வர வேண்டும். திராவிட கட்சிகளால் ஒரு பிரயோசனம் இல்லை இந்த விஷயத்தில்.


Nandakumar Naidu.
ஆக 01, 2024 12:52

இது போன்ற நேர்மையான நாட்டுக்காக,மக்களுக்காக பணியாற்றும் ஆட்சியர்கள் பாரதத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கவேண்டும். நம் நாடு சீக்கிரம் வளம் மற்றும் வல்லரசு ஆவதை யாராலும் தடுக்க முடியாது. 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுத்தபடுபவர்களை இது போன்ற வேலைகளில் பயன்படுத்த வேண்டும். நம் தமிழகத்தில் இப்போதெல்லாம் அவர்கள் மரத்தடியில் தூங்கிக்கொண்டு மற்றும் கதை பேசிவிட்டு செல்கிறார்கள். ஒரு உபயோகமும் இல்லை.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி