உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கை நெறியானால் வெற்றி பின்தொடரும்

நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கை நெறியானால் வெற்றி பின்தொடரும்

பெங்களூரு: ''நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கையின் நெறியாக மாறினால், வெற்றிகள் இயற்கையாகவே பின்தொடரும்,'' என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சையது கிர்மானி தெரிவித்தார்.பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் 60ம் ஆண்டு வைர விழாவையொட்டி, மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகள், பி.இ.எல்., மைதானத்தில் நேற்று துவங்கின. போட்டிகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சையது கிர்மானி துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கையின் நெறியாக மாறினால், வெற்றிகள் இயற்கையாகவே பின்தொடரும். விளையாட்டு என்பது மகிழ்ச்சி, ஆரோக்கியத்தின் சின்னம்.ஆரோக்கியம் என்பது அதிர்ஷ்டம் அல்ல; செல்வமாகும். நல்ல ஆரோக்கியம், வாழ்க்கையில் சரியான பாதையில் நடக்க அடித்தளமாக அமைகிறது. தினமும் 50 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொண்டால், ஆரோக்கியம் கிடைக்கும்.நல்ல பழக்க வழக்கமும், ஊக்கம் அளிக்கும் மனப்பான்மையும் இருந்தால், சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். இதனால் நாட்டுக்கு பெருமை சேர்ப்பது மட்டுமல்ல, தனிப்பட்ட வளர்ச்சியையும் அடைய முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.நேற்று முதல் மூன்று நாட்கள் இம்மைதானத்தில் கிரிக்கெட், கைப்பந்து, த்ரோபால், ஷட்டில் பேட்மின்டன், ஓட்டப்பந்தயம் நடக்க உள்ளன.துணை முதுல்வர் சிவகுமார் உத்தரவின்படி, வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரசாக ஒரு லட்சம் ரூபாய்; 2ம் பரிசாக 50,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக 25,000 ரூபாய் அளிக்கப்படும். கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கும் இதே போன்று ரொக்க பரிசு வழங்கப்படும்.ராம்பிரசாத் மனோகர்,குடிநீர் வடிகால் வாரிய தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !