மேலும் செய்திகள்
பெரும் தவறு!
6 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
6 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
6 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
9 hour(s) ago
''அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு விண்ணப்பிக்காத ஒருவருக்கு குடியுரிமை அளிக்கப்பட்டாலும், பதவியை ராஜினாமா செய்யும் முதல் நபர் நானாக இருப்பேன்,'' என, அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து, 2014 டிச., 31க்கு முன், நம் நாட்டுக்குள் ஊடுருவிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கும், குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுதும் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இதற்கு அசாம் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுதும் வேலை நிறுத்தத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.நீதிமன்றத்தை நாடலாம்இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று கூறியதாவது:குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தபின், லட்சக்கணக்கான மக்கள் மாநிலத்திற்குள் நுழைவர் என, போராட்டம் செய்பவர்கள் கூறுகின்றனர். அப்படி நடந்தால் அதை எதிர்த்துப் போராடும் முதல் ஆளாக நான் இருப்பேன்.கடந்த 2014க்கு பின், நம் நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. அது போன்ற விண்ணப்பங்கள் மிகவும் சொற்பமாகவே இருக்கும்.நான் அசாம் மண்ணின் மைந்தன். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு விண்ணப்பிக்காத ஒருவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டாலும், அதை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்யும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள், அதுகுறித்து தெளிவுபடுத்தும். அதை எதிர்ப்பவர்கள் கூறுவதில் உண்மை உள்ளதா இல்லையா என்பது சில தினங்களில் விளங்கி விடும்.மாநிலத்தில் குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்போர் லட்சக்கணக்கில் உள்ளனரா அல்லது ஆயிரக்கணக்கில் உள்ளனரா என்பது, ஒரு மாதத்தில் தெரிந்து விடும்.ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டு விட்டதால், இப்போது போராட்டங்கள் நடத்தக்கூடாது. யாருக்கேனும் குறை இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.உச்ச நீதிமன்றத்தில் மனுஇதற்கிடையே, சி.ஏ.ஏ., சட்ட விதிகளுக்கு எதிராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு ஆகியவை, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. அதில், 'குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது.இந்த சட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கும்படி வலியுறுத்தப்பட்டு உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அசாமில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உருவ பொம்மைகளையும், குடியுரிமை திருத்த சட்ட பிரதிகளையும் அவர்கள் தீயிட்டு எரித்தனர். அசாமில், 16 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அசாம் எதிர்க்கட்சியினர் மன்றம் நேற்று நடத்திய 12 மணி நேர வேலைநிறுத்தம் தோல்வி அடைந்தது.அசாம் மாணவர் சங்கம் மற்றும் அரசு சாரா உள்ளூர் அமைப்புகள் நேற்று மாலை பேரணி நடத்தினர். இன்று முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டதும், டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல்கலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. டில்லியின் வடகிழக்கு மாவட்டங்களில் பதற்றத்துக்குரிய, 43 இடங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் ஷாஹீன்பாக், ஜாமியா நகர் உள்ளிட்ட வடகிழக்கு டில்லியின் பல பகுதிகளில் இரவுநேர ரோந்து மற்றும் கொடி அணிவகுப்புகளில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர், பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் அல்லது ஆப்கானிஸ்தானில் வாழ்ந்ததற்கான ஆவணங்களையும், அவர்கள் 2014, டிச., 31க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்ததற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றில், அவர்களுக்கு அளிக்கப்பட்ட குடியுரிமையை நிரூபிக்க, பாஸ்போர்ட் இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ் அல்லது குடியிருப்பு அனுமதி சான்று பிறப்பு சான்றிதழ் சம்பந்தப்பட்ட நாட்டின் பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் பயின்றதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ் அந்நாட்டில் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகள் அல்லது விண்ணப்பதாரரின் மூதாதையர்கள் அந்நாட்டில் வாழ்ந்ததற்கான சான்றுஇவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.அவர்கள் 2014, டிச., 31க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்ததை நிரூபிக்க... விசா அல்லது இந்திய குடியேற்ற அதிகாரிகள் வழங்கிய குடிவரவு முத்திரை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட சீட்டு ஓட்டுனர் உரிமம் ஆதார் அட்டை ரேஷன் அட்டை அரசு அல்லது நீதிமன்றங்களால் வினியோகிக்கப்பட்ட முத்திரையுடன் கூடிய கடிதம் நிலப்பதிவு அல்லது வாடகை ஒப்பந்த சான்று மத்திய, மாநில மற்றும் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த சான்றிதழ்கள் காப்பீட்டு சான்று மின்கட்டண ரசிது பணியில் இருந்ததற்கான ஆவணங்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.இந்த ஆவணங்கள் காலாவதி ஆகி இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:சி.ஏ.ஏ., சட்டத்தில் விண்ணப்பிக்க, பிரத்யேகமாக, இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. அதன்படி, indiancitizenshiponline.nic.inஎன்ற இணையதளத்தில், தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 'சி.ஏ.ஏ., 2019' என்ற மொபைல் போன் செயலியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி கூறியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்கிறேன். இது மிகவும் முன்னதாகவே அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த சட்டம் தொடர்பாக முஸ்லிம்களிடையே நிறைய தவறான புரிதல்கள் உள்ளன. இந்த சட்டத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த சட்டத்தால், இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த சட்டம் எந்த முஸ்லிமின் குடியுரிமையையும் பறிக்கப் போவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும், சி.ஏ.ஏ.,வை வரவேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சி.ஏ.ஏ., சட்ட விதிகளுக்கு எதிராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு ஆகியவை, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. அதில், 'குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த சட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கும்படி வலியுறுத்தப்பட்டு உள்ளது.
6 hour(s) ago
6 hour(s) ago | 1
6 hour(s) ago
9 hour(s) ago