உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது தொடர்ந்தால் மெஜாரிட்டி, மைனாரிட்டி ஆக வேண்டியது தான்: சர்ச்சையை ஆரம்பித்து வைத்த ஐகோர்ட்

இது தொடர்ந்தால் மெஜாரிட்டி, மைனாரிட்டி ஆக வேண்டியது தான்: சர்ச்சையை ஆரம்பித்து வைத்த ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அலகாபாத்: ‛‛ மதமாற்றம் நடக்கும் மதக்கூட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்'' எனக்கூறியுள்ள அலகாபாத் ஐகோர்ட், இது தொடர்ந்தால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறி விடுவர்'' எனக்கூறி உள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கைது

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ராம்காலி பிரஜாபதி என்பவர் போலீசில் அளித்த புகாரில், ‛‛ எனது சகோதரர் ராம்பால் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரை கைலாஷ் என்பவர் டில்லி அழைத்து சென்றார். சகோதரர் வீடு திரும்பவில்லை. கைலாஷிடம் கேட்டதற்கு, அவர் உரிய பதில் தரவில்லை. எங்கள் கிராமத்தை சேர்ந்த பலரை டில்லி அழைத்துச் சென்று கிறிஸ்தவ மதத்திற்கு கைலாஷ் மாற்றி உள்ளார் '' எனக்கூறி இருந்தார். இதனையடுத்து, ஆள்கடத்தல் மற்றும் உ.பி., மாநில மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைலாஷ் கைது செய்யப்பட்டார்.

பணம் வாங்கி

கைலாஷ் ஜாமின் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதக்கூட்டங்களில் பங்கேற்கும் ஏராளமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுகின்றனர். இதற்காக கைலாஷ் பணம் வாங்கி வருகிறார் என்றார்.

உரிமையில்லை

இதனையடுத்து நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் தனது உத்தரவில் கூறியதாவது: அரசியல் அமைப்பின் 25வது சட்டப்பிரிவின்படி, ஒரு மதத்தை பின்பற்றவும், அதனை பரப்பவும் உரிமை உள்ளது. ஆனால், ஒரு மத நம்பிக்கையில் இருந்து மற்றொரு மத நம்பிக்கைக்கு மாற்ற உரிமை வழங்கப்படவில்லை. ‛ புரோபோகேசன்' என்ற வார்த்தைக்கு ஊக்குவிக்கலாம் என அர்த்தம் கூறலாம். ஆனால், ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாற்றலாம் என அர்த்தம் இல்லை. ராம்பால் வீடு திரும்பவில்லை. பலர் மதமாற்றத்திற்காக அழைத்து செல்லப்படுகின்றனர். இதனை தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள், சிறுபான்மையினராக மாறி விடுவர். மதமாற்றம் நடப்பதற்கு காரணமாக அமையும் மதக்கூட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

தஞ்சை மன்னர்
ஜூலை 04, 2024 13:02

முதலில் இந்த நீதிபதி படிச்சி சர்விஸ் பண்ணிதான் இப்போது நீதிபதியாகி ருக்கற என்பதே சந்தேகமாக இருக்கு முதலில் வட நாட்டில் இருக்கும் அணைத்து உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகளின் பின்னனி விசாரித்து மீண்டும் ஆய்வு செய்து பணியில் அமர்த்தவேண்டும்


Ravi.S
ஜூலை 04, 2024 10:53

உண்மையை சொன்னா அது எப்படி சர்ச்சை ஆகும்


J.Isaac
ஜூலை 03, 2024 10:25

முதலில் தகுந்த கல்வியை கொடுத்து வேலை வாய்ப்பை உருவாக்கி உ.பியிலிருந்து பிழைப்பிற்காக தென்னிந்தியாவிற்கு படையெடுப்பதை நிறுத்துங்கள்


Aroul
ஜூலை 03, 2024 11:30

எங்களுடையது குடும்ப கல்வி மற்றும் குருகுல கல்வி மெக்கல்லே வகுத்த பிராய்லர் கல்வி அல்ல, கிருஸ்துவன் வருவதற்கு முன் இங்க யாருமே பிச்ச எடுக்க வில்லை.


Neutrallite
ஜூலை 04, 2024 11:20

ஆமா நாங்க மட்டும் அமெரிக்காவுக்கு படை எடுப்போம் அது ஓகே, ஆனா இந்தியாவுக்குள்ள யாரும் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு போக கூடாது.


Rajendra kumar
ஜூலை 03, 2024 00:25

சரியான துணிவான தீர்ப்பு. நீதிபதிக்கு வணக்கங்கள்.


Mohan
ஜூலை 02, 2024 18:47

இந்த நீதியரசர் தீர்ப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிடத்தான் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற வளாகத்தில் புரோக்கர்களாக செயல்படும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிக்யுலர் வழக்கறிஞர்களும் இருக்கும் போது..... நம் நாட்டு மக்கள்மீது இப்படியான தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.


MADHAVAN
ஜூலை 02, 2024 18:40

யோகி கொடுத்ததை இவர் வசிக்கிறார்,


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 02, 2024 21:22

மாதவன் நீ எந்த ஊர் என்று தெரிவாயவில்லை, ஆனாலும் உன் முட்டடக்கண்ணை திறந்து உன்னை சுற்றி பார், 50 வீடு இருக்கும் கிராமத்தில் 3 மாடி சர்ச். மேலும் நகரங்களில் தெருவுக்கு ஒரு சர்ச். நீ இப்படியே கொத்தடிமையாக ஜால்ரா அடித்துக்கொண்டு இரு நாளை நிலைமை மாறியபின் நீ கதறுவாய்


konanki
ஜூலை 03, 2024 17:26

இங்கே இருக்கும் நீதிபதிகள்,ரிடையர்டு நீதிபதி சந்துரு வாசிக்கிற மாதிரியா


MADHAVAN
ஜூலை 02, 2024 18:39

உத்தரப்பிரதேசத்துலருந்து இப்படித்தான் பேசுவானுங்க,


தமிழ்வேள்
ஜூலை 02, 2024 20:46

அவர்கள் நேர்மையடன் வெளிப்படையாக பேசுகின்றனர்... திராவிட கும்பல் போல ஆப்ரஹாமிய கும்பலிடம் சில்லறைக்கு விலை போய் மாநிலத்தை மதமாற்ற சக்தியில் சிக்கவைக்க வில்லை அல்லவா?


Indhiyan
ஜூலை 02, 2024 18:26

அப்போ அரசியல் சாசனத்துக்கு கட்டுப்படாமல் அயோக்கியத்தனமாக மதமாற்றம் செய்பவர்கள்?


Azad
ஜூலை 02, 2024 18:11

அரசியல் சாசனத்திற்கு கட்டுப்படாத நீதிபடி அயோக்கியத்தனம்


Kumar Kumzi
ஜூலை 02, 2024 19:10

ரோஹிங்கிய கள்ளக்குடியேறிக்கு இந்தியாவில் என்ன வேல


Tetra
ஜூலை 02, 2024 20:35

எது அரசியல் சாசனம்,. உன் மதத்தை திணிப்பதா? நீங்கள் இப்படி சொல்வது அயோக்கியத்தனம்,.


தமிழ்வேள்
ஜூலை 02, 2024 20:42

ஹிந்து ஜனங்களை மதம் மாற்றினால் அது அயோக்கியத்தனம் ஆகாதா பாய்?


Mohan
ஜூலை 02, 2024 18:00

இந்த நீதியரசர் தீர்ப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிடத்தான் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற வளாகத்தில் புரோக்கர்களாக செயல்படும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிக்யுலர் வழக்கறிஞர்களும் இருக்கும் போது..... நம் நாட்டு மக்கள்மீது இப்படியான தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை