உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை குறி வைத்தால் தேசத்தையே உலுக்குவேன்: எஸ்ஐஆர் எதிர்ப்பு பேரணியில் மம்தா ஆவேசம்

என்னை குறி வைத்தால் தேசத்தையே உலுக்குவேன்: எஸ்ஐஆர் எதிர்ப்பு பேரணியில் மம்தா ஆவேசம்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் என்னை குறி வைத்தால், நான் தேசத்தையே உலுக்குவேன் என்று எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிரான பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறார். எஸ்ஐஆர் மூலமாக உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lb8dck04&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில் போங்கான் பகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக திரிணமுல் காங்கிரஸ் பேரணியில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். பேரணியின் முடிவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசியதாவது;ரயில்கள், விமானங்கள், எல்லைகள் போன்றவற்றை மத்திய அரசு நிர்வகித்து வருகிறது. பாஸ்போர்ட், சுங்கம் மற்றும் கலால் வரி அனைத்தையும் மத்திய அரசு கவனித்துக் கொள்கிறது. மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தினரை நாங்கள் எப்படி ஊடுருவச் செய்ய முடியும்?பீஹார் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜ விளையாட்டைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் அவர்களின் விளையாட்டை புரிந்துகொள்கிறோம். அவர்களின் ஆட்டம் மேற்கு வங்கத்தில் வெற்றி பெறாது. மேற்கு வங்கத்தை அவர்கள் தொட முயற்சித்தால், நாங்கள் முழு நாட்டையும் உலுக்குவோம்.எஸ்ஐஆர் காரணமாக 35 பேர் இறந்துள்ளனர்.செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி போலி வாக்காளர்களை உருவாக்குகிறார்கள். இது பாஜவின் புதிய திட்டம். எஸ்ஐஆரை நாங்கள் எதிர்க்கவில்லை. கடைசியாக இந்த பணிகள் 2002ல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உண்மையான வாக்காளர்களை நீக்க முடியாது என்று நாங்கள் கூறுகிறோம். தேர்தல் கமிஷனின் பணிகள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். இந்த வாக்காளர் பட்டியலின்படி பிரதமர் மோடிக்கு 2024ல் வாக்குகள் விழுந்தன. பெயர்களை நீக்கினால், மத்திய அரசும் நீக்கப்படும். ஏன் அவசரமாக எஸ்ஐஆர் நடத்தப்படுகிறது?நான் இங்கே இருக்கும் வரை, அவர்கள்(பாஜ அரசு) உங்களை (பட்டியலில் இருந்து) வெளியேற்ற அனுமதிக்கமாட்டேன். நான் பாஜவை பார்த்து பயப்படவில்லை.இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

SRIRAMA ANU
நவ 25, 2025 21:48

வட இந்தியாவில் சிங்கமாக..,,,, நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்


viki raman
நவ 25, 2025 20:02

உங்க காலம் டாட்டர் செத்தப்பவே முடிஞ்சுப்போச்சு. உங்கள தேசம் உளுக்கி விடும்.


Saai Sundharamurthy AVK
நவ 25, 2025 19:19

பேசாமல் மம்தா அரசை கலைத்து விடலாம். அடுத்த தேர்தல் வரை ஏ.சி போன்ற சகல வசதியுடன் வீட்டு சிறையில் அடைத்து வைத்து விடலாம். அதுவரை மேற்கு வங்கத்தில் கவர்னர் ஆட்சி நடக்கட்டும். ஒருவேளை மம்தா கட்சி தோற்று விட்டால் நாட்டை அச்சுறுத்தியதற்காக அவரை திகார் சிறைக்கு மாற்றி விடலாம்.


bengal tiger sorry poonai
நவ 25, 2025 19:15

எங்கே உலுக்கு பார்ப்போம்? சும்மா வெட்டி உதார் வேண்டாம்...செயலில் காட்டு.


Mohan
நவ 25, 2025 18:19

அடஎங்கப்பா என்ன ஒரு காட்டம் என்ன ஒரு வெரிக்கோபம் ? தப்பு செய்யாதவர்கள்நா ஏன் இவ்வளோ கோபம் ?? ஒரு பெண்ணுக்கு இவ்வளோ வெறியோட கோபம் வருதுன்னா ஏதோ விஷயம் இருக்கு . மடியில கனம் இருக்கறதுனால பயம் இப்படி பேச வைக்குதோ ?? தப்பு செய்யலைன்னா ஏன் பயப்பட்டு போராட்டம் செய்யணும் ? இந்தம்மா ஏதோ வானத்திலிருந்து நேரா இறங்கி வந்த தேவதை மாதிரி பிலிம் காட்டுது இரும்புத்தலைவி சர்வாதிகாரி என்று அறியப் பட்ட ஆனானப்பட்ட இந்திரா காந்தி அம்மையாரையே தேர்தலில் தோற்கடித்த மக்கள் இருக்கும் நாடு. ரொம்பல்லாம் ஆடாதீங்க அக்கோ நீங்களே வங்காள தேசம் என்று வாயை விட்டுட்டீங்க ./ அது அது ,,,,தாங்க உங்க தப்பு. சிலரை பலகாலம் ஏமாற்றலாம் ஆனா பலரை பல காலம் ஏமாற்ற முடியாது, செய்வினைக்கான கர்மா திரும்பிக்கிட்டு அடிக்கிற அடியிலே நீங்க காணாமலே போயிடுவீங்க அக்கோவ். மேற்கு வங்காள மக்களே உஷாரய்யா உஷார்


JANA VEL
நவ 25, 2025 17:43

இங்கே கூட இந்த பூமி அதிருதுக்கா ... எப்புடியாவது எங்க தலைவரை காப்பாத்துக்கா


Balaa
நவ 25, 2025 17:27

சிறுபான்மையினர் என்ன தவறு செய்தாலும் மம்தா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.. அந்த ஒட்டு வங்கி தைரியத்தில் பேசுகிறார்.


ram
நவ 25, 2025 17:15

திருட்டு கொள்ளைக்கார எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதை பார்த்தால் இந்த எஸ் ஐ ஆர் அவசியம் வேணும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி