உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோத மணல் குவாரி வழக்கு: 5 கலெக்டர்களும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத மணல் குவாரி வழக்கு: 5 கலெக்டர்களும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு வேலூர், திருச்சி உள்ளிட்ட 5 கலெக்டர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, தமிழக அரசுத்துறை உயர் அதிகாரிகள், வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qkth0dhq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் ஐந்து மாவட்ட கலெக்டர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. இருப்பினும், விசாரணையை தொடர அனுமதி அளித்தது. அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரம், சம்மனுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையும் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்தது.இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம், ''தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் ஏப்ரல் 25ம் தேதி சம்பந்தப்பட்ட 5 கலெக்டர்களும் அமலாக்கத்துறை சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது. வழக்கு மீதான விசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

NEELAMEGAM P-/ Mob No - 9 0 9 4 7 1 5 2 3 9
ஏப் 02, 2024 20:37

?? தேசமே?? பாழ்??


Subramaniam Mathivanan
ஏப் 02, 2024 15:29

கோர்ட் எந்தவொரு வழக்கிற்கும், அது கிரிமினல், கொலை, கொள்ளை, குடும்ப மற்றும் திருமண வழக்குகளுக்கு, ஒரு கால நிர்ணயம் முதலிலேயே முடிவு செய்து கொண்டு விசாரிக்க வேண்டும் மேலும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வழக்கு முடித்து வைக்கப்பட வேண்டும் மேல்முறையீடுகள் அனுமதிக்க கூடாது அப்படி செய்தால் மட்டுமே அனைவருக்கும் சாமானியர் உட்பட வழக்குகள் விரைந்து முடியும் உச்ச நீதி மன்றம் இந்த முறையை நடைமுறைப் படுத்துமா?


Lion Drsekar
ஏப் 02, 2024 14:29

அரசு ஊழியரகள் என்பவர்கள் மக்களின் சேவகர்கள் ஆங்கிலத்தில் புரட்சி செல்வி கூறியது கவர்மண்ட் சர்வன்ட் ஆனால் நடைமுறையில் மக்கள் வரிப்பணத்தில் வாழும் தலை முதல் வால்வரை எல்லா நிலைகளிலும் மக்கள் இவர்களுக்கு அடிமை என்று அன்று முதல் இன்றுவரை நடத்திக்கொண்டுவருவதுதான் உண்மை நிலை, அப்படி இருக்க கூடா நடிப்பின் காரணமாக பூக்களோடு சேர்ந்து இந்த நார்களும் அந்த நறுமணத்தை பெற்று அனுபவித்து வாழ்ந்து வரும் நிலையில், தவறான ஆலோசனையின் அடிப்படையில் சட்டத்தின் ஓட்டையை நாடிச்சென்றது வருத்தம் அளிக்கிறது, அதே நேரத்தில் சில நேரங்களில் நாங்கள் இருக்கிறோம் என்று மக்களுக்கு ஆதரவாக அவ்வப்போது நீதித்துறையின் செய்தி உயிருக்கு போராடும் நிலையில் ஒரு துளி வாயில் குடிநீர் ஊற்றியது போல், ஜனயானகத்தின் அழிவில் இருக்கும் நிலையில் இது போன்ற செய்திகள் ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது வாழ்க நீதித்துறை, வந்தே மாதரம்


SIVA
ஏப் 02, 2024 13:51

எனக்கு இதில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை, கலெக்டர் பதவியில் உள்ளவர்களுக்கு நீதிபதி போன்ற அதிகாரம் உள்ளது, விசாரணைக்கு ஆஜராகாமல் அவர்கள் வழக்கு என்ற பெயரில் விசாரணையை இழுத்து அடிப்பது அநியாயம்


Srinivasan Krishnamoorthi
ஏப் 02, 2024 13:26

காங்கிரஸ் வருமான வரியை கட்ட தேர்தல் வரை தடை போட்ட உச்ச நீதி மன்றம் அரசியல் வழக்குகள் எல்லவற்றையும் தேர்தலுக்கு பின்னே விசாரிக்கலாமே ?


கண்ணன்
ஏப் 03, 2024 10:12

ஐயா, இது அரசியல் வழக்கல்ல அவர்களது அரசாங்க வேலைகள் சம்பந்தப்பட்டது- புரிந்து கொள்ள முயற்சிக்கவும்


கண்ணன்
ஏப் 03, 2024 10:15

பாவம் கபில் சிபல் எனக்குத் தெரிந்து இவர் எந்த வழக்கிலும் வெற்றி பெற்றதில்லை ஆனால் இவரது ஃபீஸ் மட்டும் அதிகம். அரசியல் வாதிகள் கொள்ளையடித்த பணத்தை இவரிடம் கொட்டுகின்றனர். இவருக்கு Bench Shopper என்ற பெயர் டில்லியில்!


GMM
ஏப் 02, 2024 13:19

மணல் குவாரி ஒப்பந்தம் மத்திய, மாநில பொது பணி துறை போட வேண்டியது? கலெக்டர் மணல் பிரிவை அறியார் சவுட்டு மணல், ஆற்று மணல், செம்மண் கலெக்டர் டெண்டர் விட்டது தவறு கொள்ளளவு அளவிட, அதிகாரம் பெற்றவர் கிடையாது சில மாநில அரசியல் இஷ்டம் போல செயல் படுகின்றன இயற்கை வளம், பொருளாதார குற்றம் என்பதால், ED சம்மனுக்கு கலெக்டர் கண்டிப்பாக ஆஜர் ஆகி, திராவிட திருட்டு உத்தரவை உறுதி செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவு சரியே தமிழக நீதிமன்றம் அரசியல் சாசனம் மூலம் விலக்கு பெற்று விடும்?


Raa
ஏப் 02, 2024 12:47

சிறப்பு உச்சநீதி மன்றமே நீங்கள் கேட்கவேண்டிய மற்றது என்னவென்றால், எந்த அடிப்படியில் கீழமை நீதி மன்றம் ஆஜராக வேண்டாம் என்று சொல்லியது என்பதையும் கேட்கவேண்டும் சட்டம் அனைவருக்கும் சமம் அணைத்து ஊர்களிலும் சமமாகத்தானே இருக்கவேண்டும்? அதேப்படி சென்னையில் வேண்டாம் என்றும் டெல்லியில் வேண்டும் என்றும் தீர்ப்பு வரும்?


Sridhar
ஏப் 02, 2024 12:39

இதைத்தான் ஒருமாசத்துக்கு முன்பாகவே சொல்லிட்டாங்கன்னு நினைச்சோமே? இப்போதான் சொல்றங்களா? விடிஞ்சது போங்க அதுவும் மே ஆம் தேதியாம் விசாரணை ஆரம்பத்துக்கே ஆறுமாசம் தாமதம், அதுக்கப்புறம் திருட்டு கும்பல் என்னென்ன பிளான் பண்ணியிருக்கங்களோ, அதையெல்லாம் மீறி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கறதுக்குள்ள, அவுனுக பேரம் பேத்திகளை விட்டுட்டு போயிருவானுகளே என்னய்யா நீதித்துறை, சே இந்த தேர்தல் முடிஞ்சவுடனே மோடி முதல் விஷயமா நீதித்துறை சீரமைப்புலதான் கவனம் செலுத்தணும்


S SRINIVASAN
ஏப் 02, 2024 12:39

Good news for common man and bad news for DMK


Ramanujadasan
ஏப் 02, 2024 12:22

டில்லி, ஜார்கன்ட் போல இங்கேயும் நடக்க போகிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை