உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாக்குதலுக்கு பயந்து பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முயன்ற இம்ரான்கான்!

தாக்குதலுக்கு பயந்து பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முயன்ற இம்ரான்கான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019 ல் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பிரதமர் மோடியுடன், அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஆக இருந்த இம்ரான் கான் தொலைபேசியில் பேச முயன்றதாகவும், அதற்கு இந்தியா செவி சாய்க்கவில்லை என தூதரக அதிகாரி அஜய் பிஸாரியா கூறியுள்ளார்.அஜய் பிஸாரியா, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ஆக பணியாற்றியவர். இவர், ‛ anger management: the troubled diplomatic relationship' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.அந்த புத்தகத்தில் கூறியுள்ளதாவது: புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை நோக்கி 9 ஏவுகணைகளை ஏவத் தயார் நிலையில் இந்தியா வைத்து இருந்தது குறித்து அந்நாட்டிற்கு நம்பகமான தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்தியா பொறுமை காக்க வேண்டும். இது போர் நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கிவிடும் என அந்நாடு கூறியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மீறியதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. பாகிஸ்தான் ராணுவமும் சில விளக்கங்களை அளித்தது.இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என பயந்து போன பாகிஸ்தான் பிரதமர் ஆக இருந்த இம்ரான் கான், இதனை நிறுத்துவதற்கும், சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் இந்திய பிரதமர் மோடியை நள்ளிரவில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயன்றார்.அன்றைய நாளில், நான் டில்லியில் இருந்த போது, பாகிஸ்தான் தூதர் ஆக இருந்த சோஹைல் முகமதுவிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, பிரதமர் மோடியுடன், இம்ரான் கான் பேச விரும்புவதாக தெரிவித்தார். டில்லியில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, மோடியுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடையாது. ஏதாவது செய்தி இருந்தால், என்னிடம் தெரிவிக்கலாம் என சோஹைல் முகமதுவிடம் கூறினேன். அதற்கு பிறகு, இம்ரான் கானிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அந்த புத்தகத்தில் பிஸாரியா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜன 10, 2024 01:20

பிரதமர் இம்ரான்கானுடன் பேசி, வாலை ஒட்ட நெறுக்கிவிடுவேன் என்று கடுமையாக எச்சரித்து, போன் லைனை கட் பண்ணியிருக்கவேண்டும்.


Krishnamurthy Venkatesan
ஜன 09, 2024 19:39

மண்ணை மட்டுமல்ல விண்ணையும் வெற்றி கண்டவர் மோடிஜி.


Anand
ஜன 09, 2024 17:24

இது மோடியால், மோடியால் மட்டுமே முடியும்....ஜெய் ஹிந்த்


SIVAN
ஜன 09, 2024 15:26

நல்ல கருத்து... ஒரு வேலை பிஜேபி இல்லாமல் காங்கிரஸ் கடந்த 10 வருடம் ஆட்சியில் இருந்திருந்தா என்னவெல்லாம் ஆகியிருக்கும். வடக்கே பாகிஸ்தானும் வடகிழக்கே சீனாவும் கூத்தடித்து இருந்திருப்பார்கள். மக்களையும் நாட்டையும் பற்றி கவலை கொள்ளாமல். பாரத பூமி பழம்பெரும் பூமி, ஆன்மீக பூமி, சித்தர்கள் பூமி, மஹான்களின் பூமி, அந்நியர்களுக்கு இடமில்லை.


Ramalingam Shanmugam
ஜன 09, 2024 15:24

சட்டம் போட்டு சுத்தமா கட் பண்ணினா தான்


jayvee
ஜன 09, 2024 14:21

இதுக்கு நீ சரி வரமாட்டே பப்பு ..


A1Suresh
ஜன 09, 2024 13:18

சினிமாவில் புரட்சி செய்தவர்களை "புரட்சி தலைவர்" என்கின்றனர். உண்மையான புரட்சி தலைவர் மோடிஜி ஒருவரே .தம்மாத்துண்டு நாட்டை முன்னேற்றிய லீக்வான்யூ சிங்கப்பூரின் தந்தை . துருக்கியை முன்னேற்றிய "முஸ்தாபா கலாம் பாஷாவை" தேசதந்தை = "அட்டா டர்க்" என்றனர் . இவ்வளவு பெரிய தேசத்தை , உலகிலேயே இரண்டாம் மக்கள்தொகை கொண்ட நாடு , முதல் பெரிய ஜனநாயக நாடு என்பதை பொருளாதாரத்தில் மூன்றாம் இடத்திற்கு கொண்டு செல்லும் மோடிஜி "பாரதத்தின் தந்தை " எனலாம் . அதற்கான புரட்சிகள் பின்வருமாறு 1. நீதித்துறையில் தலைகீழ் புரட்சி 2. ரயில்வேயை இரண்டாக -அ )சரக்குத்துறை , ஆ)மக்கள் போக்குவரத்து என்று பிரித்து புரட்சி 3. மேக் இந் இந்தியா - சுயசார்பு ,சிதேசி பொருள்கள் உற்பத்தி புரட்சி 4. ராணுவம் - ஏவுகணை , தேஜஸ் விமானம் , டாங்கி, ஹெலிகாப்டர், விமானந்தாங்கி கப்பல், நீர்மூழ்கி கப்பல் என்று புரட்சி 5. சாலை போக்குவரத்து - பாரத்மாலா என்று காஷமீர் துவங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரை 4, 6, 8 வழி சாலைகள் 6. இருமடங்கு விமான நிலையங்கள் உண்டாக்கிய புரட்சி 7. பொருளாதாரத்தில் 4 ஆவது இடம் -புரட்சி 8. நாட்டின் பெயரையே பாரதம் என்று மாற்றிய புரட்சி 9. காஷமீர் 370 சட்டம் ஒழித்தது , ராமர் கோயில் கட்டியது, என்று புரட்சி இன்னும் வருங்காலங்களில் பற்பல புரட்சிகள் செய்வார் பல்லாண்டு வாழ்க மோடிஜி


RAMESH
ஜன 09, 2024 15:32

அருமையான பதிவு


Suresh
ஜன 09, 2024 18:35

உலகிலேயே இரண்டாம் மக்கள்தொகை கொண்ட நாடு. - இது மட்டும் தவறு.


sampath
ஜன 10, 2024 09:33

உங்க பொது அறிவை கொஞ்சம் வளர்த்துக்குங்க 2023 ல் இந்தியா சீனாவை விட அதிகம் india 142.86 crores, china 142.56 crores 3rd America 4th Indonesia


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ