உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் கவர்னருக்கு மன்னர் என நினைப்பு: அனல் பறந்த ராகுல் பிரசாரம்

காஷ்மீர் கவர்னருக்கு மன்னர் என நினைப்பு: அனல் பறந்த ராகுல் பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீர் கவர்னர் தன்னை ஒரு மன்னர் போல் நினைத்து செயல்படுகிறார்,' என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள, 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைத்து, காங்., போட்டியிடுகிறது.

3 கட்ட தேர்தல்

இந்நிலையில், தேர்தலுக்கான காங்., பிரசாரத்தை, அக்கட்சி தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் இன்று துவக்கினார். ராம்பனில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: மாநிலங்களின் அதிகாரத்தை பா.ஜ., குறைக்கிறது. மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற பா.ஜ., திட்டமிட்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு, பிறகு ஜம்மு காஷ்மீர் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

மாநில அந்தஸ்து

ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதை காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி உறுதி செய்யும். இது மிகவும் அழகான இடம், அடுத்த கூட்டத்திற்கு செல்ல எனக்கு மனமில்லை. பா.ஜ., ஆர்.எஸ்.எஸ் ., வெறுப்பு, வன்முறை மற்றும் பயத்தை பரப்புவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர் வரை பாதயாத்திரை நடத்தினோம். இன்று காஷ்மீரில் ஒரு ராஜா இருக்கிறார். உங்கள் பணம் வெளியாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் கவர்னர் தன்னை ஒரு மன்னர் போல் நினைத்து செயல்படுகிறார். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

V GOPALAN
செப் 11, 2024 07:59

நம் பாரத நாடு எண்ணற்ற போர்வீரர்களை கொன்ற காஷ்மீர் தீவிரவாதிகளை சோனியா காந்தி குடும்பத்த்தின் அனுமதியினால் என்றும் மறக்க முடியாது


tmranganathan
செப் 06, 2024 16:13

ராகுல் போதை தூக்கத்திலிருந்து நேர காஷ்மீர் போய்ட்டு அங்கே மன்னராக இருந்தவர் ஹிந்துவான் டர். கரண்சிங்த்தான்ன்னு அறியாமல் தான் நேருவின் கொள்ளுபேரன்னு உதடோ எதிர்பார்க்கிறார். ஒரு நாள் கூட வேலை செய்யாமல் ஊர்சூற்றின்னு பட்டம் பெற்றார்.சேர்ந்த மோசடி பாரூக் உமர் பத்து தலைமுறைக்கு பணம் சேர்த்து மக்களை தீவிரவாதியாக மாற்றி தங்களை காப்பாற்றிக்கொண்டனர்.


masetung
செப் 06, 2024 10:47

என்னவோ இந்தியா மொத்தத்துக்கும் இவரு பரம்பரை ஒனர்னு நெனைப்பு


Ethiraj
செப் 05, 2024 19:16

Insulting constitutional authorities and public servants by LOP is most indecent act


கண்ணன்
செப் 05, 2024 07:12

இவனுக்குத் தனது மனதில் பட்டத்தி இளவரசன் என்ற நினைப்போ?!


Almighty
செப் 04, 2024 22:52

இந்த தத்தி என்றைக்கும் திருந்தாது.


T.sthivinayagam
செப் 04, 2024 22:14

ஆங்லேயர் பெயர் இருக்ககூடாது ஆங்கிலேய சட்டம் இருக்ககூடாது ஆனால் கவர்னர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுவார்களாம் ஏன் அவரகளுக்கு தாய் மொழி என்று எதுவும் கிடையாதா என இந்தியர்கள் கேட்கின்றனர்


nagendhiran
செப் 04, 2024 20:47

மன்னரா இருக்கலாம் பப்பு? மன்னர் காலத்து ஆட்சிதான் சிறந்ததாக இருக்கு? உங்க ஐம்பது ஆண்டு ஆட்சிகளில் எவ்வளவு .........


Ramesh Sargam
செப் 04, 2024 19:28

நீங்கள் ஒரு மூழ்கிக்கொண்டிருக்கும் கட்சியின் தலைவர். உங்களுக்கே நாட்டின் மன்னர் என்கிற நினைப்பு இருக்கிறது. நீங்கள் இன்று நாட்டின் பிரதமராக இருந்திருந்தால் எப்படி எல்லாம் ஆடுவீர்கள்...


sundarkanaga
செப் 04, 2024 19:13

பெரிய அறிவாளின்னு நினைப்பு


புதிய வீடியோ