உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சி தலைவர்களின் கைது நடவடிக்கையில் தலையிட தேர்தல் கமிஷன் மறுப்பு

எதிர்க்கட்சி தலைவர்களின் கைது நடவடிக்கையில் தலையிட தேர்தல் கமிஷன் மறுப்பு

புதுடில்லி : தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவதை தேர்தல் கமிஷன் தட்டிக்கேட்க வேண்டும் என, பல்வேறு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்த நிலையில், 'சட்டம் மற்றும் நீதித்துறையின் செயல்பாட்டில் நாங்கள் குறுக்கிடுவது முறையல்ல' எனக்கூறி, தேர்தல் கமிஷன் ஒதுங்கிக் கொண்டது.டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.லோக்சபா தேர்தல் நேரத்தில் பிரசாரத்தை முடக்குவதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

விதிமீறல்

கெஜ்ரிவாலை போலவே பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் மத்திய விசாரணை அமைப்புகளால் ஊழல் வழக்கில் குறிவைக்கப்படுவதை தேர்தல் கமிஷன் தலையிட்டு தட்டிக்கேட்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் முறையிட்டன.இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:குற்றவியல் வழக்கு விசாரணையில் அரசியல் தலைவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டு, அது நீதித்துறையின் பரிசீலனை மற்றும் உத்தரவுகளின் கீழ் இருக்கையில், அந்த விவகாரம் தேர்தல் கமிஷனில் முன்வைக்கப்படும்போது, அரசியலமைப்பு சாரம்சத்தின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் வழிநடத்தப்படுகிறது. தேர்தல் களத்தில் அனைவருக்கும் சரி சமமான வாய்ப்பு மற்றும் வேட்பாளர்களின் பிரசார உரிமைகளை பாதுகாப்பதில் தேர்தல் கமிஷன் உறுதியுடன் செயல்படுகிறது.அதே நேரம், நீதித்துறை யின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிடுவது முறையாக இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒரு மாத காலத்திற்கு தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக வந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொது வெளியில் முதல்முறையாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.அதன் விபரம்:கடந்த ஒரு மாதத்தில், ஏழு அரசியல் கட்சிகளை சேர்ந்த 16 பிரதிநிதிகள் குழு, தேர்தல் கமிஷனரை நேரடியாக சந்தித்து புகார்கள் அளித்துள்ளன. கிட்டத்தட்ட 200 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை

அனைத்து அரசியல் கட்சிகளும் சரிசமமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. பா.ஜ., - காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப் பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்களை பேசும் தலைவர்கள் மீது உடனடி நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக இணையதளம் வாயிலாக 2.68 லட்சம் புகார்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில், 2.67 லட்சம் புகார்கள் சராசரியாக 100 நிமிடங்களில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'விவிபாட்' வழக்கில் சுப்ரீம் கோர்ட்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள, 'விவிபாட்' எனப்படும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டு சீட்டுக்களை முழுமையாக எண்ண வேண்டும் என கோரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு மாறிய ஜெர்மனி போன்ற நாடுகள் மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு மாறியதை மனுதாரர்கள் தரப்பு சுட்டிக் காட்டியது.இதை கேட்ட நீதிபதிகள், ஜெர்மனியின் மக்கள் தொகை ஆறு கோடி. நம் நாட்டின் வாக்காளர் எண்ணிக்கை 97 கோடி. இதில் 60 கோடி பேர் ஓட்டளித்தால் கூட அதை முழுமையாக எண்ணி முடிக்க எத்தனை நாள் ஆகும்' என, கேள்வி எழுப்பினர்.மேலும், 'வெளிநாட்டு நடைமுறைகளை நம் நாட்டுக்கு பொருத்தி பார்க்க முடியாது' என தெரிவித்த நீதிபதிகள், 'ஏதாவது ஒரு நடைமுறையை நாம் நம்பித் தான் ஆக வேண்டும். இருக்கும் நடைமுறை தேவையின்றி, குறைத்து மதிப்பிட வேண்டாம். 'ஓட்டுச் சீட்டு முறை புழக்கத்தில் இருந்தபோது, ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், ஓட்டுச் சீட்டில் முறைகேடு செய்தல் போன்ற நடவடிக்கைகள் அரங்கேறிய சம்பவங்களை நினைவுபடுத்த விரும்புகிறோம்' என, தெரிவித்தனர். விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அசோகன்
ஏப் 17, 2024 11:33

கோடிகளை கொள்ளை அடிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத திருட்டு பயல்கள்... தேர்தலுக்கு பின்னால் ஒழிக்கின்றனர்...


Sampath Kumar
ஏப் 17, 2024 09:12

உங்க தேர்தல் அலுவலகம் ஏபோவோ பிஜேபியின் ஏடுபுடி ஆகிவிட்டது என்பதை நாடு அறியும்


raja
ஏப் 17, 2024 06:05

எதிர் கட்சி தலைவன் என்று சொல்வதை காட்டிலும் ஊழல் பெருச்சாளிகள் கொள்ளை காரர்கள் கடத்தல் காரர்கள் என்று சொல்ல வேண்டும்


Kasimani Baskaran
ஏப் 17, 2024 05:44

த்தீம்கா காசு கொடுத்து வாக்குகளை வாங்குவதற்கு எவனாவது வழக்குத்தொடர்வானா என்றால் நிச்சயம் இல்லை ஆனால் வாக்கு எண்ணும் இயந்திரம் ஓட்டை என்று தேர்தல் நேரத்தில் வழக்குத்தொடர்வது தொடர்ந்து நடக்கும் காமடி தேர்தல் பத்திரம் வெளிப்படையானது ஆனால் தனியாக வசூலிக்கும் தொகைக்கு கணக்குக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்ற கேவல நடைமுறை தொடர்வதை நீதிமன்றம் கேள்வியே கேட்கவில்லை அறக்கட்டளை மூலம் லவட்டும் முறையை காங்கிரசிடமிருந்துதான் தீம்கா கற்றுக்கொண்டது - இன்று அவர்கள் அதில் நிபுணர்கள் எதையும் தீர்க்கமாக ஆராயாதவரை பிரச்சினை சிக்கலானது என்பதைக்கூட நீதிமன்றம் புரிந்து கொள்ள மறுப்பது மகா கேவலமான அணுகுமுகுறை விசாவுக்கு சீன நிறுவனங்களிடமே கூட வசூல் செய்த வெள்ளைச்சட்டை வணிகர் இன்னும் யோக்கியன் போல உருட்டுவதை நீதிமன்றம் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது நீதியை குழிதோண்டிப்புதைத்ததற்குச்சமம் என்பதைக்கூட அவர்கள் உணரவில்லை என்பது விபரீதம்தான் கிட்டத்தட்ட சாத்தன் வேதம் ஓதியது போலத்தான்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை