உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 44 பேர் வீர மரணம்

காஷ்மீரில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 44 பேர் வீர மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: காஷ்மீரில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 44 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் ஒடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தாலும் சிறிது, சிறிதான தாக்குதலில் கடந்த இரண்டு ஆண்டு 8 மாதங்களில் இதுவரை 44 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களில் கத்துவா, ரஜோரி , பகுதிகளில் நடந்த தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. துப்பறியும் நாய்கள் உதவியுடன் , ட்ரோன்கள், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடக்கிறது. மழை மற்றும் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீஸ் டிஜிபி ரஷ்மிரஞ்சன், உயர் ராணுவ அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். உதம்பூர், சம்பா, ரஜோரி, பூஞ்ச், சம்பா, லாலாசவுக் மற்றும் இதனையொட்டிய பகுதிகளில் தேடுதல் பணி நடக்கிறது. இதுவரை நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் , ராணுவ வீரர்கள் செல்லும் வாகனம் மற்றும் முகாம் மீதே அதிக தாக்குதல் நடத்தி உள்ளனர். மிக அருகில் வந்து தாக்குதல் நடத்துவதும், சாதுர்யமாக எவ்வித காயமுமின்றி தப்பி செல்வதும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டு 8 மாதங்களில் இதுவரை 44 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கூடுதல் கண்காணிப்பு பணியில் உஷாராக இருக்குமாறு பாதுகாப்பு படையினர் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஜூலை 11, 2024 22:56

இது மத்தியில் உள்ள ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தை தான் காண்பிக்கிறது!


nagendhiran
ஜூலை 11, 2024 17:10

அரசியல் செய்வோம்


சந்திரன்,போத்தனூர்
ஜூலை 11, 2024 17:28

தீவிரவாதிகளை அடுத்து தேச துரோகிகளை மொதல்ல போட்டுத்தள்ளனும்.


sundarsvpr
ஜூலை 11, 2024 16:20

எட்டு மாதத்தில் 48 ராணுவ வீர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் காஷமீர் ஒரு சமவெளி பகுதி இல்லை. காட்டு பகுதி இது போன்று நிகழ்வுகள் உலகில் எல்லா நாடுகளில் நடக்கின்றன. நாடுகளுக்கும் கர்மா விதி உண்டு.


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ