உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தூண்டி விடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

தூண்டி விடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

கார்கில்: ‛‛ பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்'' என பிரதமர் மோடி கூறினார்.

கடமை

கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு டிராசில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டிற்காக உயிர்தியாகம் செய்ததற்காக ராணுவ வீரர்களுக்கு தேசம் எப்போதும் கடமைப்பட்டு உள்ளது. 1999 ல் கார்கிலில் ராணுவ வீரர்களை சந்தித்த அனுபவம் உள்ளது. கார்கில் போரில் உயிர்தியாகம் செய்தவர்களுக்கு தலைவணங்குகிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pce9m7ew&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பதிலடி

பாகிஸ்தான் தனது தவறுகளில் இருந்து இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அந்நாடு, பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதுடன், பயங்கரவாதிகளை பின்னால் இருந்து இயக்கி வருகிறது. அவர்களால், இந்தியாவை ஒரு போதும் வீழ்த்த முடியாது. எந்தவொரு பயங்கரவாத சவால்களும் முறியடிக்கப்படும். பயங்கரவாதிகளின் சதி நிறைவேற அனுமதிக்க மாட்டோம். பயங்கரவாதத்தை தூண்டிவிடுபவர்களின் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.பயங்கரவாதத்தின் ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்.

காஷ்மீர்

370 நீக்கிய பிறகு காஷ்மீர் வளர்ச்சியை கண்டுள்ளது.காஷ்மீரில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை வளர்ந்து வருகிறது. புது எதிர்காலத்தை பற்றி காஷ்மீர் சிந்தித்து வருகிறது. பல தசாப்தங்களுக்கு பிறகு சினிமா ஹால் திறக்கப்பட்டது. லடாக்கில் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு உள்ளது.

அரசியல்

இளைஞர்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகிறது. பென்சன் தொகையை சேமிப்பதற்காக அக்னிவீர் திட்டம் செயல்படுத்தவில்லை. பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அக்னிவீரர்கள் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஷின்குன் லா சுரங்கப்பாதை

கார்கில் சென்ற பிரதமர் மோடி, ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். 4.1 கி.மீ. நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக ஷிங்குன் லா சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்ட பின், இதுதான் உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajah
ஜூலை 26, 2024 17:13

பாகிஸ்தானுக்கு எதிராக செயல் படுவது சிறுபான்மையினருக்கு செய்யம் துரோகம் என்றல்லவா திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் கருதுகின்றது.


மோடி தாசன்
ஜூலை 26, 2024 15:21

வாழ்த்துக்கள் ஐயா உங்கள் அதிரடி நடவடிக்கையால் ஜ.காஷ்மீரில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஒன்று போதுமே உங்கள் திறமைக்கும் தேசபக்திக்கும், ஓய்வில்லாமல் உழைக்கும் உலக மகா தலைவர் மோடிஜி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.


KUMAR. S
ஜூலை 26, 2024 13:57

2014 தேர்தலுக்கு முன்ன கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிம் இந்தியா கொண்டு தண்டனை கொடுப்போம்னு மார் தட்டினார். இப்போ தாவூத் பத்தி பேசுறதே இல்ல.


Victor Aasirvaadham
ஜூலை 26, 2024 13:17

என் தெரியாது ? அதிலே வரி, இதிலே வரி, உக்காந்தா வரி, நின்னா வரி, நடந்தா வரி, படுத்தா வரி இப்படின்னு எல்லாத்துக்கும் வரி போடும் திறமை இந்த ரெண்டு தேசிய கட்சிகளுக்கும் இருக்கு


karupanasamy
ஜூலை 26, 2024 14:52

வாடிகன் எந்த வரியும் விதிப்பதில்லை இடத்தை காலி பண்ணு


மோகனசுந்தரம்
ஜூலை 26, 2024 11:50

ஐயா நீங்களும் மன்மோகன் சிங் போல பேச ஆரம்பித்து விட்டீர்களே. உடனடி நடவடிக்கை தானே உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


R S BALA
ஜூலை 26, 2024 13:39

நீங்க நம்பறவரு இங்க என்னத்த செய்து...


முருகன்
ஜூலை 26, 2024 11:01

பாகிஸ்தானின் கனவிலும் இந்தியாவை எதுவும் செய்ய முடியாது இதனை வைத்து அரசியல் செய்ய நினைப்பது ஏன்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை