உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவியேற்க ஜாமின் கோரும் திகார் சிறைவாசியான சுயேட்சை எம்.பி.,

பதவியேற்க ஜாமின் கோரும் திகார் சிறைவாசியான சுயேட்சை எம்.பி.,

புதுடில்லி: எம்.பி.யாக பதவியேற்க ஜாமின் கோரி திகார் சிறையில் உள்ள சுயேட்சை எம்.பி. தாக்கல் செய்த மனுவுக்கு ஜூலை 01-ம் தேதி பதில் அளிக்க என்.ஐ.ஏ.,வுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் வெற்றி பெற்ற என்ஜீனியர் ரஷீத் என்று அழைக்கப்படும் அப்துல் ரஷீத் என்பவர் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் கீழ் 2019ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாராமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை தோற்கடித்து எம்.பி.,யானார்.இந்நிலையில் எம்.பி.,யாக பதவியேற்க ஜாமின் கோரி டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிரண் குப்தா, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி பதில் அளிக்க உத்தரவிட்டு மனுவை ஜூலை 01 ம் தேதி ஒத்தி வைத்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rangarajan Cv
ஜூன் 25, 2024 07:03

Same law applicable to all ministers whethet central or state govt.


தாமரை மலர்கிறது
ஜூன் 25, 2024 01:31

குற்றவாளிகளை தேர்ந்தெடுத்தால், அவர்களால் செயல்படமுடியாது என்பதற்க்கு உதாரணமாக இவர் இருக்க வேண்டும். அதனால் இவரை வெளியேவிட கூடாது. இவர் மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருப்பார். இன்னொரு எம்பி ரெண்டு தொகுதிகளில் நின்று ஒன்றை ராஜினாமா செய்துள்ளார். அவரையும் சஸ்பெண்ட் செய்தால், அவர் தாய்லாந்திற்கு சென்று ரெஸ்ட் எடுக்க வசதியாக இருக்கும்.


JAFFARULLA
ஜூன் 26, 2024 00:45

Enna court 5 years complete not proved complaint ellam jathi veri govt policies


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை