உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛இண்டியா கூட்டணி துணையாக இருக்கு : கெஜ்ரிவாலுக்கு ராகுல் ஆறுதல்

‛‛இண்டியா கூட்டணி துணையாக இருக்கு : கெஜ்ரிவாலுக்கு ராகுல் ஆறுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அநீதிக்கு எதிராக போராடும் உங்களுக்கு ‛‛இண்டியா கூட்டணி' துணையாக இருக்கும் என திகார் சிறையில் உள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங். எம்.பி., ராகுல் ஆறுதல் கூறியுள்ளார்.டில்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதமும், சி.பி.ஐ.யால் கடந்த ஜூன் மாதமும் கைது செய்யப்பட்ட டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.நேற்று அவருக்கு 56 வது பிறந்த நாள் இதையொட்டி பார்லிமென்ட் லோக்சபா எதிர்கட்சி தலைவரும், காங்.. எம்.பி.யுமான ராகுல் தனது ‛எக்ஸ்' தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து, அநீதியை எதிர்த்து போராடும் உங்களுக்கு இண்டியா கூட்டணி எப்போதும் துணையாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Indian
ஆக 19, 2024 09:10

ராகுல் ஜி ஊழலுக்கு துணை போக வேண்டாமாம்


Ramar P P
ஆக 18, 2024 04:01

கெஜ்ரிவால் தப்பு செய்தாரா இல்லையா என்பது தெரியாது.ஆனால் இந்தியா கூட்டணி துணை நிற்கும் என்று ராகுல் கூறுகிறார்.இதுதான் இந்திய நாடு. என்ன செய்ய?


R K Raman
ஆக 17, 2024 21:56

புகார் கொடுத்தவர்கள் உறுதுணையாக இருக்கும் விந்தை.. விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்


Ramani Venkatraman
ஆக 17, 2024 18:44

துணையாக இருப்பது "பங்கா"ளியாக ஆவதற்கோ அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை...இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்...நிரந்தரமாக ஏமாற்றப் படுவது ஓட்டுப் போடுபவர்களே


Ramesh
ஆக 17, 2024 10:52

மது பான ஊழல் வழக்கு போடவேண்டும் என்று சொன்னதே காங்கிரஸ் தானே


Mettai* Tamil
ஆக 17, 2024 10:23

அப்படியே செந்தில்பாலாஜிக்கும் ....அநீதியை எதிர்த்து போராடும் செந்தில் பாலாஜியே , உங்களுக்கு இண்டியா கூட்டணி எப்போதும் துணையாக இருக்கும் என்று வாழ்த்து சொல்லுங்க ராகுல் சார் ... அவரோட தொழில் கொஞ்சம் சுருங்கிக்கிடக்கு ....உலகளவில் விரிவு படுத்த சப்போர்ட் பண்ணுங்க ராகுல் சார் ....


RAMAKRISHNAN NATESAN
ஆக 17, 2024 10:22

ஞாபக மறதி அதிகம் ..... ஆம் ஆத்மீ கட்சி உருவானதே காங்கிரசின் ஊழல்களை எதிர்த்து தான் என்பது அவருக்கு மறந்துவிட்டது ..... ஏன் கெஜ்ரிவாலுக்கும் கூட மறந்துவிட்டது ....


தமிழ்வேள்
ஆக 17, 2024 09:40

இண்டி கும்பலுக்கு ஜெயில் ரொம்ப புடிக்கும் போல... ஒட்டு மொத்தமாக உள்ளே போய் சில்லறை அரசியலில் ஈடுபடலாம்...நீ ஜமாய் நைனா..


M Ramachandran
ஆக 17, 2024 09:34

தோடு தொங்க


nv
ஆக 17, 2024 09:33

கூட்டு களவாணிகள்!! மக்களுக்கு விழிப்புணர்வு அவசியமானது. அரசியல்வாதிகள் பெரும் சுயநலவாதிகள்.. இவர்கள் இருவரும் பரஸ்பரம் எப்படி தூற்றி கொண்டு இருந்தவர்கள் என்று நினைவில் கொள்ள வேண்டும்..


மேலும் செய்திகள்