உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் இண்டியா கூட்டணி போராட்டம்

அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் இண்டியா கூட்டணி போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் பார்லி., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக வெற்றிப்பெற்றது. இதனையடுத்து மோடி, 3வது முறையாக பிரதமரானார். இந்த நிலையில் 18வது பார்லி., கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) துவங்கியது. முதல்நாளில் வெற்றிப்பெற்ற எம்.பி.,க்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பார்த்துஹரி மஹதப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wl8c9bx2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னதாக பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பார்லி., வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில் சோனியா, கார்கே, கனிமொழி, உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

R.Varadarajan
ஜூன் 30, 2024 18:49

அது அரசியல்சட்ட புத்தகமா இல்லை 1975ம் வருட அவசர நிலை டைரியா?


saravanan
ஜூன் 24, 2024 22:46

போராட்டம் நடத்துபவர்களுக்கு ஒரு சின்ன விண்ணப்பம். இப்போதாவது கையிலுள்ள நம் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கொஞ்சம் திறந்து பாருங்கள் யார் ஆட்சியில் மாநில அரசுகள் விரும்பம் போல கலைக்கப்பட்டன. சட்டத்திருத்தங்கள் எத்தனை முறை மேற்கொள்ளபட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக எமர்ஜென்சி மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டங்களையே முடக்கிபோட்டது யார் ஆட்சியில் இப்படி பலதரப்பட்ட கேள்விகளுக்கு உடனடி பதில் கிடைக்குமே


Swamimalai Siva
ஜூன் 24, 2024 20:55

இவங்க 45-50 இருந்த போது, அங்கு தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இப்போது 99. காரணம் புரிந்தால் சரி. இவங்க பார்லிமெண்டை வரும் நாட்களீல் ஒழுங்கா நடக்க விடுவார்களா


Ramani Venkatraman
ஜூன் 24, 2024 20:28

அரசியலமைப்பை Constitution of இந்தியா மீறியவர்களும், அதன் படிமங்களை அவையில் கிழித்து எறிந்தார்களும் அதைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்வதே அரசியலமைப்பிற்கு இன்றைய அரசால் கிடைத்த பெரிய அங்கீகாரம். Holding the Right of Expression


Anand
ஜூன் 24, 2024 16:53

திருட்டை தடுத்தால் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.


Anand
ஜூன் 24, 2024 16:52

நாட்டை நல்வழியில் நடத்தினால் அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது, சமூக விரோதிகளை அடையாளம் கண்டு தண்டித்தால் அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது... இதுகளுக்கு வெட்கம் என்பதே கிடையாதா?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 16:50

கள்ளச்சாராய பலிகளில் அதிகம் பேர் பட்டியலினத்தவர்கள் .... தமிழக ஆட்சியாளர்கள் அரசியல் சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் .


Balamurugan
ஜூன் 24, 2024 15:17

அவளோ வைத்தெறிச்சல். இத்தனை பேரு ஒன்னு சேந்தும் பிஜேபியை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கடுப்பு. இனிமேல காங்கிரஸ் ஜெயிக்கும் என்ற நினைப்பே இருக்காது.


Venkatasubramanian krishnamurthy
ஜூன் 24, 2024 14:58

நாட்டில் எமர்ஜென்சி கொண்டுவந்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் நாட்டை சர்வாதிகாரமாக நடத்திய காங்கிரஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைத் தீண்டுவதற்கு வெட்கப்பட வேண்டும்.


R K R
ஜூன் 24, 2024 21:46

அதுவும் எமர்ஜென்சி கொண்டு வந்த 50வது ஆண்டு நிறைவு நாளன்று....


Kumar Kumzi
ஜூன் 24, 2024 14:39

இந்தியா கூட்டணியை இல்ல இத்தாலி கூட்டணியா பாவம் ஓட்டு போட்ட மக்கள் மோடி வெற்றி பெறாமல் இருந்திருந்தால் நாடு நாசமாகி இருக்கும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி