உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விழலுக்கு இறைக்கும் நீர்; மாலத்தீவுக்கு மீண்டும் நிதி வழங்கியது இந்தியா!

விழலுக்கு இறைக்கும் நீர்; மாலத்தீவுக்கு மீண்டும் நிதி வழங்கியது இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மாலத்தீவுக்கு வழங்கப்படும் 50 மில்லியன் டாலர் நிதியுதவியை மேலும் ஓர் ஆண்டுக்கு இந்தியா நீட்டித்துள்ளது.அண்டை நாடான மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியவர் முகமது முய்சு. சீனாவுடன் நட்புறவு பாராட்டிய அவர், இந்திய விரோத செயல்பாடுகளை அதிகப்படுத்தினார். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற்றினார். தொடர்ச்சியான இந்திய விரோத செயல்பாடுகள், இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்பு பிரசாரம் காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது. அன்றாட வருவாய்க்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி இருந்த மாலத்தீவுகள், இதனால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அன்னிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு சீனாவும் உதவி செய்யவில்லை. இந்த நிலையில் தான், மீண்டும் உதவி கேட்டு இந்தியாவிடம் வந்துள்ளது மாலத்தீவு அரசு.

50 மில்லியன் டாலர்

இந்தியா கடந்தாண்டு வழங்கிய 50 மில்லியன் டாலர் அவசர கால நிதியுதவியை, இந்தாண்டும் நீட்டிக்கும்படி மாலத்தீவு வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் வழங்கப்படும் 50 மில்லியன் டாலர் நிதியுதவியை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்துள்ளது.

இந்தியாவுக்கு நன்றி

இது குறித்து மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அதீப் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '50 மில்லியன் டாலர் நிதியுதவியை நீட்டித்ததற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது நமது இருநாடுகளுக்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்துகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி மாலத்தீவின் பாதையை வலுப்படுத்தும்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Ramesh Sargam
செப் 21, 2024 21:17

இந்தியா இப்படி துரோகிகளுக்கு உதவி செய்வது முற்றிலும் சரியல்ல.


Palanisamy T
அக் 10, 2024 17:50

துரோகிகளைக் கூட மன்னிக்கலாம் ஆனால் இவர்களோ இந்தியா செய்த உதவியை மறந்து நன்றிக் கொன்றவர்கள் மன்னிக்கமுடியாது. அது அவர்களின் பிறவிக் குணம். ஆனால் இதே உதவியை அன்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இலங்கை தமிழர்களுக்கு ஏன் இந்தியா செய்ய முன்வரவில்லை.


அப்புசாமி
செப் 21, 2024 17:57

அது எப்புடி விழலுக்கு இறைத்த நீராகும்? நாம சீனாவை எதிர்க்கத்தானே காசு குடுக்குறோம்? நம்ம கிட்டேயிருந்து உருவும் இரண்டாவது நாடு. முதல்ல இலங்கை.


Palanisamy T
அக் 10, 2024 17:55

இலங்கைக்கு அதுவும் ராஜபக்சே அரசுக்கு உதவினார்கள். இலங்கை தமிழர்களுக்கு உதவவில்லையே


Arachi
செப் 21, 2024 16:40

இந்தியாவுடன் உறவை முறித்துக் கொள்ள முயற்சித்தவர் தற்போதைய மாலத்தீவு அதிபர். இவருக்கு உதவி செய்வது விழலுக்கு இறைத்த நீர் போன்றது.


Indhuindian
செப் 21, 2024 16:34

பாம்புக்கு பால் வார்க்கிறார்கள்


Barakat Ali
செப் 21, 2024 16:14

மாலத்தீவுக்கு புருனே சுல்தானும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ம் உதவணும் ......


Barakat Ali
செப் 21, 2024 16:13

இந்த ஏழை இஸ்லாமிய நாட்டுக்கு மத்திய கிழக்கு நாடுகள் ஏன் உதவக்கூடாது ????


சமூக நல விரும்பி
செப் 21, 2024 14:10

இந்திய வம்சாவழி வந்தவர்கள் இன்று உலகம் முழுவதும் வாழ்கிறார்கள். அதனால் மாலத்தீவு அரசு நம்மிடம் உதவி கொரும்பொது அதனை உண்மை இந்தியன் நிராகரிக்க மாட்டான். மேலும் இது கடன் தானே தவிர தானம் இல்லை. அண்டை நாடுகளின் ஆதரவு என்றும் நமக்கு தேவை. இந்திய வல்லரசாக வேண்டும் என்றால் அது ஒரு குறுகிய காலத்தில் நடக்கும் செயல் அல்ல. Bilateral அக்ரீமெண்ட்ஸ் எல்லா நாடுகளுடன் இருந்தால் தான் இந்தியா எல்லா துறையிலும் சிறந்து விளங்க முடியும்.


Dharmavaan
செப் 21, 2024 16:10

பாத்திரம் அறிந்துதான் பிச்சையிட வேண்டும் முஸ்லிகள் இப்போது பங்களாதேஷில் எப்படி இருக்கிறான் அங்கு ஹிந்து ஜனத்தொகை என்ன


பாமரன்
செப் 21, 2024 13:46

தவறான தலைப்பு... உபி பிஹார் போன்ற மாநிலங்களில் எவ்ளோ செலவு செஞ்சும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெருசா ஒன்னும் செய்ய மாட்டேங்கறாய்ங்கன்னு கெட்டு ஒழின்னு விட்டுட முடியுமா... என்னைக்காவது முன்னேறி நாட்டுக்கு உதவியாக வருவாய்ங்கன்னு நம்பி தானே மத்த மாநில உழைப்பை அவிங்களுக்கு தர்றோம்... அது போலதான்... நம்முடைய குறுகிய எல்லையில் உள்ள நாடு மாலத்தீவு... துக்கடாவா இருந்தாலும் சமயத்தில் வேலைக்காகும்... குஜ்ஜு கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தது மாதிரி நினைச்சு குடுக்கலாம்... தப்பில்லை


Neelachandran
செப் 21, 2024 13:34

விழலுக்கு இறைத்த நீர்நிழலுக்கு செய்யும் அலங்காரம்.நன்றி கெட்டவனை ஏன் நட்பாக்க வேண்டும் வெளியுறவுத்துறை.


MANIMARAN R
செப் 21, 2024 13:09

எல்லா காயும் வெளிய இருக்கே உள்ளே போனால் தான் நகர்த்த முடியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை