உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அந்த ஒரு விஷயத்தில் அமெரிக்கா, ஜெர்மனியை விட இந்தியா மேல்: அடித்துச் சொல்கிறது எஸ்.பி.ஐ.,

அந்த ஒரு விஷயத்தில் அமெரிக்கா, ஜெர்மனியை விட இந்தியா மேல்: அடித்துச் சொல்கிறது எஸ்.பி.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சை விட இந்தியா பணவீக்கத்தை சிறப்பாக கையாண்டதாக எஸ்.பி.ஐ., வங்கி கூறியுள்ளது.இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரிசர்வ் வங்கி, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் இணைந்து செயல்படுத்திய சீர்திருத்தம் காரணமாக உருவான துடிப்பான நிதி நிலை கட்டமைப்பு காரணமாக, பணவீக்கம் குறித்த இலக்கு நிர்ணயிக்க முடிந்தது.2021 முதல் 2024 வரை, இந்தியாவை காட்டிலும் பெரிய பொருளாதார நாடுகள் கடுமையான பணவீக்க சவால்களை சந்தித்தன. இந்த காலத்தில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சை விட பணவீக்கத்தை இந்தியா சிறப்பாக கையாண்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 14, 2024 09:47

பொருளாதாரத்தில் பண வீக்கம் என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். இது தான் பணவீக்கம் என்பது. நீங்கள் கூறுவது போல் அதிகமான பண புழக்கம் அல்ல. பொருட்களின் விலையேற்றம் என்பது பல காரணிகளை கொண்டது. உதரணமாக தேவைக்கும் குறைவாக விநியோகம் இருந்தால் டிமாண்ட் அண்ட் சப்ளை இருந்தால் பொருட்கள் விலை உயரும். பொதுவாக சம்பள விகிதம் அதிகமானால் பொருட்கள் விலை உயரும். அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்தை அதிகரித்து கொண்டே இருப்பது ஆனால் அதற்கேற்ப தனியார் உற்பத்தி நிறுவனங்களில் சம்பளம் உயராதது பொருட்கள் விலை உயரும். வியாபாரி அதிக சம்பளம் வாங்குபவருக்கு ஏற்ப தான் விலை நிர்ணயம் செய்வார். ஏனெனில் அவரும் அரசு அதிகாரி போல் அவர் வருமானமும் உயர் வேண்டும் என்று தான் நினைப்பார். குறைந்த வருமானம் உள்ளவர்களை பற்றி வியாபாரி கவலை பட மாட்டார். ஆகவே அரசு அதிகாரிகள் சம்பளத்தை வருடா வருடம் உயர்த்துவது மாதா மாதம் படி உயர்த்துவது அரசே பென்ஷன் வழங்கும் பழைய முறை ஜோடி கம்பெனிகள் வழங்கும் ஊதியத்திற்கு கட்டுபாடுகள் விதிப்பது போன்றவை செய்து உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் நாட்டில் அதிக ஊதியம் பெறுவோருக்கும் இடையில் உள்ள சம்பள விகிதம் 10 சதவீதம் வித்தியாசத்தில் இருந்தால் பண வீக்கம் வராது. சமூக நீதியும் காப்பாற்றப்படும். எம்எல்ஏ ஒரு இலட்சம் சம்பளம் வாங்குகிறார் அனால் அவருக்கு ஓட்டு போடும் வாக்காளர் இருபதாயிரம் சம்பளம் வாங்குகிறார். இது எப்படி சமூக நீதியை கொண்டு வரும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 20:01

பணவீக்கம் என்பது தேவைக்கும் அதிகமாக நடக்கும் பணப்புழக்கம் ... அந்த பணப்புழக்கத்துக்கு ஊழல் காரணமாக இருந்தால் அதற்கு கடினமான நடவடிக்கைகளை எடுத்தால் அது கட்டுப்படுத்தப்படும் .... ஆனால் அப்படிச் செய்யாமல் மக்களின் முதலீடுகளுக்கு வட்டி குறைப்பு எந்த அளவுக்குச் செய்கிறார்களோ, அவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு அவ்வாறு செய்யப்படுவதில்லை .... இதன் காரணமாக நடுத்தர மக்களும் கூட தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு ரோட்டுக்கு வரும் நிலைமை வந்தாகிவிட்டது .... ஏழை, பணக்காரர் இடைவெளி அதிகமாகி தனி நபர் வருமானம் குறைந்து விட்டது ....


Sathyanarayanan Sathyasekaren
செப் 12, 2024 21:24

ஊழல் செய்து கொள்ளை அடித்து சொத்து சேர்த்த கொள்ளைகாரர்களுக்கு என்று மக்கள் வோட்டை போடுவதை நிறுத்தினால் தான் தங்கள் சொல்வது நடக்கும். நடுத்தர மக்களின் நிலைக்கு அவர்களே தான் காரணம் . திருடன் என்று தெரிந்தும் வோட்டை போடுவது நடுத்தர மக்களின் குற்றம்.


ஆரூர் ரங்
செப் 13, 2024 12:56

கடைசியாக எப்போது டெபாஸிட் வட்டி விகிதத்தைக் குறைத்தனர்? சமீபத்தில் பல வங்கிகள் குறுகியகால வைப்புகளுக்கு வட்டியை அதிகரித்துள்ளன என்பதுதான் உண்மை . இது பல வளரும் நாடுகளை விட அதிகம்.


தாமரை மலர்கிறது
செப் 12, 2024 18:56

சந்தேகமே இல்லை. அமெரிக்கா பொருளாதார நிபுணர்கள் இந்தியாவை மெச்சுகிறார்கள். காரணம் இலவசம் இலவசம் என்று கொடுத்துவிட்டு, பணத்தை பிரிண்ட் அடிக்கவில்லை. அதனால் விலைவாசி ஏற்றம் இல்லை.


செல்வம்
செப் 12, 2024 18:21

2021-2024 ல் பாலும் தேனும் பெருகி ஓடிச்சி. அமெரிக்கா, ஜெர்மனிக்காரங்க வந்து அள்ளிக்கிட்டுப் போனாங்க.


Sathyanarayanan Sathyasekaren
செப் 12, 2024 21:29

காரோண போன்ற பேரிடர்கள் வந்தாலும் நீ பிச்சை எடுக்காத நிலையில் இருக்கிறாய். அதற்க்கு சந்தோச படு. திருட்டு திராவிட கழகம், கான் காங்கிரஸ் போல ஊழல் செய்யாமல் இருந்தால் இன்னும் நல்ல நிலைமையில் இருக்கலாம்.


Apposthalan samlin
செப் 12, 2024 17:42

நேற்று அன்னபூரணா ஹோட்டல் உரிமையாளர் அழகாக பேசினார் gst பற்றி . ஆனால் இந்தியா 165 லட்சம் கோடி கடனில் இருக்கிறது . பெட்ரோல் டீசல் வரி கிஸ்தி எல்லாம் எங்கே போகுதோ ?


Chakkaravarthi Sk
செப் 12, 2024 18:28

அய்யா உங்களுக்கு தெரிய வேண்டிய தகவல்களை பெறுவதற்கு வழி இருக்கிறதே கேளுங்களேன்


ஆரூர் ரங்
செப் 12, 2024 18:48

நாட்டின் பொருளாதார நிலை,நிர்வாகம், ஜிடிபி நன்றாக இருந்தால்தான் கடன் கொடுப்பார்கள்.அமெரிக்காவே பல டிரில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது.


R S BALA
செப் 12, 2024 16:42

எப்படி கையாண்டிங்க அத சொல்லுமய்யா


Hari
செப் 12, 2024 19:51

Oh sonna uanku puriyumakum....


Thirunavukkarasu Sivasubramaniam
செப் 12, 2024 16:36

இதுதான் அது


Kumar Kumzi
செப் 12, 2024 16:11

இப்போ டொட் இந்தியா கூட்டணியின் கூமூட்ட கொத்தடிமைங்க வந்து ஊளையிடுவானுங்க பாருங்க


Saai Sundharamurthy AVK
செப் 12, 2024 16:03

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் இந்தியா புண்ணாக்காக ஆகி போய் இருக்கும். ஜெய் மோடிஜி ! அருமையான பிரதமர், செம்மையான உலக ஞானம் !!அருமையான நிர்வாகம்...சூப்பர்.


என்றும் இந்தியன்
செப் 12, 2024 16:00

SBI பெயர் அந்த வங்கியில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்களால் Slow Bank Of India என்று அறியப்படுகின்றது அவர்கள் செயல் படும் விதத்தை வைத்து எதிலும் எப்போதும் எவ்வழியிலும் எந்நாளும்


Sathyanarayanan Sathyasekaren
செப் 12, 2024 21:31

இன்றைய இணைய வழியில் வங்கிக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை