உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசாரணை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

விசாரணை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

வாஷிங்டன்:'டில்லி கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்தும் திறன் இந்தியாவிடம் உள்ளது. அவர்களுக்கு நம் உதவி தேவையில்லை' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். கனடாவில் நடந்த ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்து பேசினர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, 'டில்லி கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக அமெரிக்க தரப்பில் உதவிகள் செய்ய முன்வந்தோம். ஆனால், விசாரணை நடத்தும் திறன் இந்தியாவிடம் உள்ளது. எனவே, அவர்களுக்கு நம் உதவி தேவையில்லை. அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்,' என்று கூறினார். இதைத் தொடர்ந்து, டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்து கொண்டார். முன்னதாக, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம், டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கவலை தெரிவித்திருந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

duruvasar
நவ 13, 2025 10:22

யாரும் இருக்கும் இடத்தில இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது. இதை அன்றே சொன்னது கண்ணதாசன் ஐயா.


Makkal Manam
நவ 13, 2025 08:35

அமைதி மார்க்கம் இவ்வளவு ஆட்டம் போட காரணம், அமைதி மார்க்கம் ஆட்களின் டாடி அமெரிக்கா


RAJ
நவ 13, 2025 07:47

உங்க நாடு நாரத வேலைய நிப்பாட்டினாலே என்த ஊர்லயும் பிரச்சினை இருக்காது.


Ramesh Sargam
நவ 13, 2025 07:33

டில்லி கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்தும் திறன் இந்தியாவிடம் உள்ளது. இதில் சந்தேகமே இல்லை. ஆனால் எனக்கு வேறு ஒரு சந்தேகம். அது, பஹல்காம் தாக்குதல் நடந்தபிறகு நமது வீரர்கள் துல்லியமாக பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள பயங்கரவாத கும்பலின் இருப்பிடத்தை குறிவைத்து தாக்கி அழித்தது. ஆனால், இந்தியாவின் உள்ளே இருக்கும் அந்த கபோதிகளின் இருப்பிடங்களை ஏன் துல்லியமாக அறிந்து அழிக்கமுடியவில்லை?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை