உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தின் தாய் இந்தியா : ஜனாதிபதி குடியரசு தின உரை

ஜனநாயகத்தின் தாய் இந்தியா : ஜனாதிபதி குடியரசு தின உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜனநாயகத்தின் தாய் இந்தியா என ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். நாளை (ஜன.26) குடியரசு தின விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,நாட்டு மக்கள் அனைவருக்கும் ‛குடியரசு தின வாழ்த்துக்கள். நாளை நம் நாட்டின் அரசியலமைப்பு துவக்கத்தை கொண்டாடும் பொன்னான நாள். நாம் இந்திய மக்கள் ' என்ற வார்த்தையுடன் துவங்குகிறது. இந்தியாவில், ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தின் கருத்தை விட மிகவும் பழமையானது. அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டை 'ஜனநாயகத்தின் தாய்' என்று அழைக்கிறோம். அயோத்தியில் புகழ்பெற்ற புதிய கோவிலில் ராமர் சிலையின் வரலாற்று சிறப்புமிக்க 'பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை நாம் கண்டு கழித்தோம்.. ராமர் கோயில் மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல. நீதித்துறை செயல்பாட்டின் மீதான நம்பிக்கைக்கும் சான்று.நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும் , அரசியல் அமைப்பை உருவாக்க பங்களித்தவர்களுக்கும் இன்று நாம் மரியாதை செலுத்துவோம். நமது இலக்குகளை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நக்கீரன்
ஜன 26, 2024 19:06

அப்பட்டமா யாரோ மண்டபத்தில் எழுதிக்குடுத்த உரைதான் இது.


அப்புசாமி
ஜன 26, 2024 19:05

பிரிட்டனில் பார்லிமெண்ட் 1600 களிலேயே வந்தாச்சு. அமெரிக்கா காங்கிரஸ், தேர்தல் முறை வந்து 250 வருஷமாச்சு. நாம ஜனநாயகத்துக்கு வந்து 75 வருஷமாச்சு. நாமளே தாய்னு சொல்லிக்கிட்டா அவிங்கள்ளாம் பாட்டி, கொள்ளுப்பாட்டி ஆகணும் மேடம்.


Sampath Kumar
ஜன 26, 2024 12:50

மேடம் வாங்கின காசுக்கு மேல கூவுறீங்க இங்கே சந்நயகம் கிடையாது பாண்டிய இந்திய ஆண்டான் அடிமை சமூகமே மன்னர் ஆட்சி தொடக்கி ஜாமின் ஆட்சி வரை ஆண்டான் அடிமை வழக்கம் தான் இருந்தது இதில் ஏங்கே சனநாயகம் கண்டீர்கள் ? ஸநாயகத்தின் தாய் வீடு நிச்சயம் இந்திய இல்லை வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்


Ramesh Sargam
ஜன 26, 2024 00:06

அப்ப ஜனநாயகத்தின் தந்தை யார் என்று ராகுல் காந்தி, உதயநிதி போன்ற லூசுகள் எதிர்கேள்வி கேட்க வாய்ப்பு உள்ளது


A1Suresh
ஜன 25, 2024 23:52

பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஸ்ரீராம்


Bye Pass
ஜன 25, 2024 22:41

தேசப்பிதா காந்தி ...


Sakthi Parthasarathy
ஜன 25, 2024 22:10

ஐவரும் கடைசி இரண்டு வரிகளை மட்டும் படித்து இருந்தால் என்னவாகும். சிலபேர் ஊட்டு போட்டு தெரிவானதால் நன்றியுடன் இருக்கிறார் போலும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ