உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் மோசமான நாடுகளின் பட்டியல்: எந்த இடத்தில் இந்தியா!

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் மோசமான நாடுகளின் பட்டியல்: எந்த இடத்தில் இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் மோசமான ஐந்து நாடுகள் என வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்து உள்ளது.அமெரிக்காவை சேர்ந்த யேல் மற்றும் கலிபோர்னியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 176 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2000-2012 ஆண்டு கால கட்டங்களில் இந்தியாவின் நிலை 122 மற்றும் 127 ஆக இருந்த நிலை 2014-ம் ஆண்டில் இருந்து சரிய தொடங்கியது. இதன்படி 2018-ல் 177, 2020-ல் 168, 2022-ல் 180, 2024-ல் 176 ஆக உள்ளதாக தெரிவித்து உள்ளது. 2024-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவை காட்டிலும் மோசமாக நிலைகளை கொண்டநாடுகளாக பாகிஸ்தான், மியான்மர், லாவோஸ், மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுச்சூழல் உயிர்சக்தி போன்றவற்றில் இந்தியா குறைந்த மதிப்பெண்களை பெற்ற போதிலும், வனப்பாதுகாப்பு தொடர்பானவற்றில் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.வளரும்நாடுகளில் நிதி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, விதிகளை அமல்படுத்துவதில் கடினம் போன்றவற்றால் செயல்திறன் குறைவதாக தெரிவித்து உள்ளது.சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் 34-வது இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. டென்மார்க் நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
ஜூன் 17, 2024 10:29

உணவுக்காக ஆடு மாடு கோழி போன்ற விலங்குகளை வளர்ப்பது சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்தான மீத்தேன் வாயு உற்பத்தியில் முடியும். மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பும் முக்கிய காரணம். பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.


ديفيد رافائيل
ஜூன் 16, 2024 22:01

சீக்கிரத்திலே முதலிடத்தில் இந்தியா வந்திடும்


GMM
ஜூன் 16, 2024 21:32

உலகில் மோசமான 5 நாடுகளில் இந்தியாவிற்கும் இடம். அதிகார அமைப்பு, செயல் திட்டம் வகுக்க வேண்டும். மோசமான நிலை மாறும் வரை, ஆடு, மாடு உணவிற்கு பயன்படுத்தி வருவதை, பச்சை மரங்கள் வெட்டுவதை நிறுத்த வேண்டும். ஆடு மாடு, பச்சை மரம் வெட்டினால் கொலைக்கு சமம் என்று சட்டம் வகுக்க வேண்டும். வியாபாரம் செய்ய மீன் பிடிக்க கட்டுப்பாடு வேண்டும். குளம், குட்டை மீட்டு எடுக்க வேண்டும். முன்னோர்கள் பள்ளமான பகுதியில் திட்டம் போட்டு நீர் பிடிப்பு பகுதிகள் உருவாக்கியது. அதிகளவு நதி நீர் ஊருக்குள் பாய வேண்டும். பூமி குளிரும். நிலத்தடி நீர் உயரும். நிலமை மேம்படும் வரை குடும்ப கட்டுப்பாடு அமுலில் இருக்க வேண்டும்.


சாமி
ஜூன் 16, 2024 20:37

ஹையா..பாகிஸ்தானை விட ஒரு இடம் மேலே இருக்கோம். யாரங்கே ரெண்டு மெடல் கொண்டாங்க. குத்திவிடுவோம்.


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ