உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த 3 ஆண்டில் டாப் 3 இடத்தில் இந்தியா: அடித்துச் சொல்கிறது ஐ.எம்.எப்.,

அடுத்த 3 ஆண்டில் டாப் 3 இடத்தில் இந்தியா: அடித்துச் சொல்கிறது ஐ.எம்.எப்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '2027ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்,' என சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.,) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்தார்.அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. கடந்த நிதியாண்டில் நாங்கள் எதிர்பார்த்ததை விட, வளர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருந்தது. 2027ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

7 சதவீதம்

தரவுகளின் படி, 2024-25ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும். இது, இந்திய அரசின் கணிப்பை விட அதிகம். தனியார் நுகர்வு செலவினம் 2023-24-ம் நிதியாண்டில் 4.0 சதவீத வளர்ச்சியடைந்தது. இரு சக்கர வாகன விற்பனையைப் பார்த்தால், உங்களுக்கு தெரியும். இந்தியாவில் வாங்குவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

அப்பாவி
ஆக 17, 2024 07:41

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...


RAMAKRISHNAN NATESAN
ஆக 16, 2024 20:10

கடந்த 2023-24 ம் நிதியாண்டில் சீனாவில் இருந்து மட்டும் 8.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறோம். இது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 15 சதவீதமாகும் ....... அதாவது சீனாவின் உற்பத்தியுடன் நம்மை ஒப்பிட்டால் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் .....


அப்பாவி
ஆக 16, 2024 17:38

ஆளுக்கு 15 கோடி.போடற அளவுக்கு வளர்ந்து வல்லரசாயிடுவோம்.


Kumar Kumzi
ஆக 16, 2024 17:50

ஓசிகோட்டருக்கே வக்கில்லாம ஓவாவுக்கு ஒட்டு போடுற கொத்தடிமைக்கு குசும்பு பாரு ஹீஹீஹீ


Ramesh
ஆக 16, 2024 19:17

ஒரு கட்டிங் கள்ள சாராயம் குடிச்சாலே எங்களுக்கு பத்து லட்சம் உடனடியாக வீடு தேடி வரும். இவ்வளவு சிறப்பான வளமுள்ள நாடு எங்கள் திராவிட நாடு.


venugopal s
ஆக 16, 2024 16:56

நூற்றைம்பது கோடி மக்கள் தொகையை வைத்துக் கொண்டு பொருளாதாரத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் வராமல் இருந்தால் தான் ஆச்சரியப் படவேண்டும்! காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ஐந்து வருடங்கள் முன்பே வந்திருக்கும்!


Kumar Kumzi
ஆக 16, 2024 17:56

டாஸ்மாக் கூமுட்டைங்களும் தேசத்துரோகி காங்கிரஸ் ஆட்சியும் இருந்திருந்தால் பூவாவுக்கு பிச்சை தான் எடுத்துட்டு இருப்போம் கூமுட்ட


RAMAKRISHNAN NATESAN
ஆக 16, 2024 20:15

இத்தனைகோடி மக்கள்தொகை இருக்கும்போது பொருளாதாரத்தில் முன்னேறுவதில் வியப்படைய ஒன்றுமில்லை என சிதம்பரம் சொல்லிவிட்டார் என்று திமுக அடிமைகளும் அதையே பிடித்துத் தொங்குகிறார்கள் .... அதிக மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உற்பத்தியில் முன்னேறாதவரை, அதிகம் பேர் மத்திய மாநில அரசுகளிடம் இலவசங்கள், திட்டங்கள், ரேஷனுக்காக கையேந்திக்கொண்டு இருக்கும்வரை பொருளாதார முன்னேற்றம் எப்படி சாத்தியம் ? வேறு காரணங்கள் இல்லையா, என்று சிதம்பரமும் சொல்லவில்லை ....


ponssasi
ஆக 16, 2024 16:36

வாகனம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகம், ஆனா ரோடுதான் ஒழுங்கா இல்ல மேடம். சுங்கச்சாவடி கட்டணம் மட்டும் சரியா கணக்கிட்டு வாங்குறாங்க அந்த சுங்க சாவடி சாலைதான் படுமோசம், கொஞ்சம் நீங்களும் சொல்லுங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 16, 2024 16:19

ரிட்டையர் ஆனபிறகு சேச்சிக்கு பாஜகவில் சேரும் எண்ணம் இருக்கோ ????


Vijay D Ratnam
ஆக 16, 2024 15:48

ஜார்ஜ் சோரஸ், ராகுல், ஹிண்டன்பர்க் கூட்டணியை மீறி மத்திய பாஜக அரசு இந்த சாதனை நிகழ்த்துவதில் உறுதியாக உள்ளது. இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவாளர்கள், மதமாற்ற மாஃபியா கும்பல், நக்ஸ்லைட், கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட், கான்.க்ராஸ் போன்ற தேச விரோத கும்பல்களை மீறி இந்த சாதனையை நிகழ்த்தவேண்டும்.


Duruvesan
ஆக 16, 2024 15:47

கருமம் புடிச்ச ஹிண்டன்பெர்க் ராவுள் கூட்டணி, இவனுங்க பேச்சை நம்பி அதானி போர்ட்ஸ் வித்தேன், இப்போ ஏற ஆரம்பிடுச்சி. போன வாட்டி இறக்கி விட்டானுங்க, அப்போ வாங்கினேன் 470 கு. இந்த வாட்டி எவனும் நம்பள போல. பிக்காளி பசங்க. இறங்கும் வாங்கலாம்னு காசு சேர்த்து வெச்சேன், இனி என்ட்ரி கிடைப்பது கஷ்டம்


ajp
ஆக 16, 2024 15:45

ஒலிம்பிக்கில் பார்த்தோம்.


Duruvesan
ஆக 16, 2024 15:20

அதுக்கு தான் விடியலும் ராவுளும் அமெரிக்க பயணம், சோரஸ் ஹிண்டன்பெர்க் ராவுள் விடியல் கூட்டணி வாழ்க


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி