உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: 119 செயலிகளுக்கு அரசு தடை

பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி: 119 செயலிகளுக்கு அரசு தடை

புதுடில்லி: தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக 'கூகுள் பிளே ஸ்டோர்'ல் இருந்து, 119 செயலிகளை பதிவிறக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில், பெரும்பாலானவை சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இயக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி, 'டிக் - டாக், ஷேர் - இட்' உட்பட, 100க்கும் மேற்பட்ட செயலிகளை கடந்த 2020ல் மத்திய அரசு தடை செய்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளின் பகிர்வுக்கும், அரட்டை பேச்சுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5mzgy78k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்தடுத்த ஆண்டுகளிலும், சீன செயலிகளுக்கு எதிரான தடை தொடர்ந்தது. இந்நிலையில், 119 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செயலிகளின் பட்டியலை அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலை நடத்தும் கண்காணிப்பு தளமான லுாமென் தரவு தளம் வெளியிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை கூகுள் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.தடை செய்யப்பட்ட செயலிகளில் பெரும்பாலானவை நம் அண்டை நாடான சீனா மற்றும் ஹாங்காங்கைச் சார்ந்தவை எனக் கூறப்படுகிறது. ஒரு சில செயலிகள் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்தவையாகும்.தடை செய்யப்பட்ட செயலிகளின் முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை. தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒழுங்கற்ற செயல்பாடு காரணமாகவும், அரசுக்கு எதிரான உள்ளடக்கங்களை பயன்படுத்தியதாலும், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69, ஏ, பிரிவின்படி, 119 செயலிகளும் முடக்கப்பட்டுள்ளன.'மங்கோஸ்டார்' குழுவால் உருவாக்கப்பட்ட சிங்கப்பூரை மையமாக கொண்ட, வீடியோ அரட்டை மற்றும் கேமிங் தளமான சில்சாட், 'ப்ளோம்' நிறுவனத்தால் சீனாவால் உருவாக்கப்பட்ட, 'சாங்ஆப்', ஆஸ்திரேலிய நிறுவனமான, 'ஷெல்லின் பி.டி.ஒய்.,' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, 'ஹனிகேம்' ஆகியவை, முடக்கப்பட்ட செயலிகளில் முக்கியமானவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

KavikumarRam
பிப் 21, 2025 10:43

ராகுலை தடை செய்தாலே சீனப்பிரச்சினை பெருமளவு குறையும்.


Raghavan
பிப் 21, 2025 13:43

If the Government take action on the dual citizenship hold by him either he will be sent out of the country or to be bared in coning the election for a further period of his life time. The Government is not doing it.


Kasimani Baskaran
பிப் 21, 2025 06:25

ஸ்டீவ் ஜாப்ஸின் கூற்றுப்படி மொத்த ஆண்டிராய்டும் திருடப்பட்டது. அதை கூகிள் முதலில் வடிவமைத்த பொழுது பாதுகாப்பை கருத்தில் கொள்ளவே இல்லை.


அப்பாவி
பிப் 21, 2025 05:56

சீன இறக்குமதி அதிகமாகிட்டே போனா எந்த அச்சுறுத்தலும் இல்லை.


நிக்கோல்தாம்சன்
பிப் 21, 2025 05:32

சில நேரங்களின் இந்த ஆண்டிராய்டு மொபைல்களே முழுதும் தடை செய்யப்படவேண்டும் என்று தோன்றுகிறது


முக்கிய வீடியோ