மேலும் செய்திகள்
ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு
1 hour(s) ago
புதுச்சேரி கவர்னர் மாளிகை லோக் நிவாஸ் என பெயர் மாற்றம்
4 hour(s) ago
சத்துணவு தோட்டம் அமைக்கும் பயிற்சி
4 hour(s) ago
புதுடில்லி: இண்டிகோ விமான நிறுவனத்தின் தோல்விக்கு காரணமே மத்திய அரசின் அணுகுமுறையே காரணம் என்று காங்., எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 1,200க்கும் அதிகமான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்தாகின. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது. அப்போது, அடுத்தாண்டு பிப்.,10ம் தேதிக்குள் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, நிலையான சேவை வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் தோல்விக்கு காரணமே மத்திய அரசின் அணுகுமுறையே காரணம் என்று காங்., எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு நவ., 6ம் தேதி வெளியிட்ட தன்னுடைய அறிக்கையை குறிப்பிட்டு, எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்; இண்டிகோ விமான நிறுவனத்தின் தோல்விக்கு காரணமே மத்திய அரசின் அணுகுமுறையே காரணம். விமானங்களின் ரத்து, தாமதம் மற்றும் உதவியில்லாத நிலையால், சாதாரண இந்திய மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து துறைகளிலும் நியாயமான போட்டிக்கு இந்தியா தகுதியுடையது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago