வாசகர்கள் கருத்துகள் ( 1 )
போரை வெல்ல வேண்டும்.. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்
மேலும் செய்திகள்
டிச., 20ல் மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி பயணம்
7 hour(s) ago
புதுடில்லி: ''உறுதியான செயல்பாடுகளால் மட்டுமே போர்களை வெல்ல முடியும்,'' என முப்படை தளபதி அனில் சவுகான் பேசினார்.ஹைதராபாத்தில் துண்டிகலில் உள்ள இந்திய விமானப்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில், அனில் சவுகான் பேசியதாவது: இந்தியாவின் பலம் ஜனநாயக ஸ்திரத்தன்மையில் உள்ளது. நமது ராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். உறுதியான செயல்பாடுகளால் மட்டுமே போர்களை வெல்ல முடியும். வெற்று கூச்சல்களால் எதுவும் செய்ய முடியாது. எங்கள் பலம் ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நாளும் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் தயாராகவும் இருக்கும் திறனில் தான் உள்ளது. இன்றைய தினம் பட்டம் பெற்றவர்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். போர்க்காலங்களில் மட்டுமல்ல, தனது சேவைக்காலம் முழுவதும் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் வெற்றிக்கு வழிவகுக்கும். ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் தீவிரம் குறைந்துள்ளது. ஆனால் இன்னும் தொடர்கிறது. வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க ராணுவத்தினர் தயாராக இருக்கின்றன. ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாகவும் தயாராக இருப்பது அவசியம். இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.
போரை வெல்ல வேண்டும்.. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்
7 hour(s) ago