UPDATED : ஜூன் 26, 2025 04:41 PM | ADDED : ஜூன் 26, 2025 04:40 PM
லக்னோ: நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம் என இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் தந்தை ஷம்பு உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.பல தடைகளைத் தாண்டி, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. வீரர்கள் 14 நாட்கள் அங்கு ஆய்வு நடத்துகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bywq1xkl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுபன்ஷு சுக்லாவின் குடும்பத்தினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு டிராகன் விண்கலம்வெற்றிகரமாக டாக்கிங் செய்யப்படுவதை லக்னோவில் நேரலையில் பார்த்தனர்.பிரார்த்தனை செய்கிறோம்!
நிருபர்களிடம் சுக்லாவின் தந்தை ஷம்பு கூறியதாவது: நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம். இது எங்களுக்கு ஒரு பெருமையான நாள். இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம், என்றார்.மகிழ்ச்சியாக இருக்கிறது
சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா கூறியதாவது: மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். மாலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்திப்போம் என்றார்.
பெருமையான தருணம்
நிருபர்கள் சந்திப்பில், சுபன்ஷு சுக்லாவின் சகோதரி மிஸ்ரா கூறியதாவது: இது எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். இது மிகவும் முக்கியமான தருணம். அவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன், என்றார்.