உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.பி.எஸ்., அதிகாரி சாலை விபத்தில் உயிரிழப்பு: முதல் பதவியேற்புக்கு வந்தபோது பரிதாபம்!

ஐ.பி.எஸ்., அதிகாரி சாலை விபத்தில் உயிரிழப்பு: முதல் பதவியேற்புக்கு வந்தபோது பரிதாபம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் முதன் முதலாக பதவியேற்க வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி, சாலை விபத்தில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் நேற்று மாலை ஹசன்னிலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள கிட்டானே பகுதியில் நடந்தது. மத்திய பிரதேச மாநிலத்தின் சிங்ராவ்லி மாவட்டத்தில் உள்ள துாசர் என்ற கிராமத்தைசேர்ந்தவர், ஹர்ஷ் பர்தன்(26), இவர் 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்., பயிற்சியை, மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் முடித்துள்ளார். 6 மாத மாவட்ட பயிற்சியை முடித்தார்.பர்தனுக்கு கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹொலேநராசிபூரில் ஏ.எஸ்.பி.,யாக பதவி அளிக்கப்பட்டது. முதன் முதலில்பதவியேற்பதற்காக வந்த பர்தனின் கார் டயர் வெடித்ததால், காரை ஓட்டி வந்த மாவட்ட ஆயுதபடை கான்ஸ்டபிள் மஞ்சேகவுடா, நிலை தவறினார். இதனால் சாலையின் ஓரத்தில் இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது கார் மோதியது. இதில் பர்தன் தலையில் பலத்த காயங்களுடன் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஜனப்பிரியா மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவில் உயிரிழந்தார்.டிரைவர் சிறு காயங்களுடன் ஹசன் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார்.உயிரிழந்த பர்தனுக்கு, மாநில முதல்வர் சித்தராமையா இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Matt P
டிச 03, 2024 16:48

கார் சக்கரம் வெடித்து சத்தம் கேட்டால் உடனே பதட்டப்படாமல் மெதுவாக பிரேக்கை அமுக்கி காரை ஓரமாக நிறுத்த பாருங்கள். பதட்டமும் பயமும் கூட சில விபத்துக்களுக்கு காரணமாகலாம்.


vijay
டிச 02, 2024 20:43

RIP


Ramesh Sargam
டிச 02, 2024 20:25

என்னவொரு கொடுமை. பெற்றவர்கள், நண்பர்கள், உறவினர்கள் நிலையை எண்ணிப்பார்த்தால் மிக மிக பரிதாபமாக இருக்கிறது. அந்த இறைவனுக்கு கருணையே இல்லையா?


theruvasagan
டிச 02, 2024 19:51

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் ஆறு பேர் பலி. தெலங்கானாவில் கட்டுப்பாடிழந்த லாரி மோதி சாலேயோரம் காய்கறி விற்பவர்கள் 10 பேர் மரணம். இந்த செய்தியில் ஐபிஎஸ் பயிற்சி முடிந்து பதவி ஏற்கப்போன இளம் அதிகாரி கார் விபத்தில் உயிரிழப்பு. இறைவா. இது என்ன கொடுமை. அப்பாவிகளை நல்லவர்களை இந்த பூமியில் வைக்க மாட்டாயா. இவையெல்லாம் கர்மவினைப் பயன் என்பதை எங்கள் மனதால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


CHARUMATHI
டிச 02, 2024 19:41

Yes that raises some doubts. May be a planned one


aaruthirumalai
டிச 02, 2024 19:24

அட கடவுளே.


KRISHNAN R
டிச 02, 2024 19:12

ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்


வைகுண்டேஸ்வரன்
டிச 02, 2024 18:08

வாழ்க்கை யின் எல்லா நிகழ்வுகளுக்கும், ஒற்றை வார்த்தை பதிலைத் தான் இறைவன் தந்திருக்கிறார். அது தான் : "கர்மா ". கண்களில் கண்ணீர் தாமாகவே நிறைந்து விட்டது. ????????


ngm
டிச 02, 2024 18:15

கர்மாவை பற்றி கண்ணீர் விட்டாலும் விடாமல் முட்டு குடுப்பதும் கர்மாவே


ديفيد رافائيل
டிச 02, 2024 17:48

Speed குறைச்சு drive பண்ணியிருந்தா கூட car ஐ control பண்ணியிருக்கலாம். Government officials எப்பவுமே இப்படி பண்றானுங்க speed குறைச்சு drive பண்ணா குடி முழுகிடும் போல.


sundarsvpr
டிச 02, 2024 16:49

சாவு என்பது வினை பயன். எந்த பிறவியில் செய்தபாவத்தின் பலன். காரையும் ஓட்டுனரை குற்றம் கூறமுடியாது. இவர் மரணத்தினால் இவர் குடும்ப உறுப்பினர்கள் வருத்தம் அடைவர். இதுவும் விதி. இந்த செய்தியை படிப்பதும் விதி. இறைவனையும் குற்றம் கூறமுடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை