உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமேதி, ரேபரேலி தொகுதிகளை கை கழுவுகிறதா காங்.,

அமேதி, ரேபரேலி தொகுதிகளை கை கழுவுகிறதா காங்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:உ.பி.,யில் காங்.,-ன் வி.ஐ.பி, தொகுதிகளான ரேபரேலி ,அமேதி தொகுதிகளை அக்கட்சியே கைகழுவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதுஉ.பி., மாநிலத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளது. இத்தனை தொகுதிகள் இருந்தாலும் அமேதி தொகுதி காங்.,கட்சியின் வி.ஜ.பி.,தொகுதியாக கருதப்பட்டு வந்தது. காரணம் முன்னாள் முதல்வர் ராஜிவ் காலம் முதல் தற்போது ராகுல் வரையில் தொடர்ந்து அமேதிதொகுதியில் போட்டியிட்டதே காரணம். காங்கிரஸ் கட்சியில் சஞ்சய் , ராஜிவ், சோனியா, ஆகியோர் தொடர்ந்து போட்டியிட்டு வென்றனர். ராகுலும் கடந்த 2014 ம் ஆண்டுவரை அமேதியில் தான் வெற்றி பெற்று வந்தார்.கடந்த 1999 ம் ஆண்டு முதல் சோனியா அமேதியில் நின்று வெற்றிபெற்றார். தொடர்ந்து ராகுல் அந்த தொகுதியில் வெற்றிபெற்ற போதிலும் 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2024 தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி போட்டியிடுவார்.அமேதியை விட்டு கொடுத்த ராகுல் 2019-ம் ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டார். இங்கு வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து மீண்டும் தற்போது 2024-ல் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுகிறார் ஸ்மிருதி இரானி. அதே நேரத்தில் அமேதியில் போட்டியிட போவதில்லை என உறுதிப்படுத்தி உள்ளார் ராகுல். 1999-ம் ஆண்டு முதல் அமேதியில் போட்டியிட்டு வந்த சோனியா, ராகுலுக்காக விட்டுக் கொடுத்து ரேபரேலி தொகுதிக்கு மாறினார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்.,படுதோல்வி அடைந்த போதிலும் சோனியா ஒருவர் மட்டுமே ரேபரேலியில் வெற்றி பெற்றார். அப்படி இருந்தும் தற்போது 2024-ல் நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ரேபரேலியில் போட்டியிடாமல் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சோனியா. ரேபரேலியில் இந்த முறை தோல்வி முகம் என்று கிடைத்த தகவலே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் காங்., வளர்ந்து வரும் முகமாக அறியப்படும் சோனியாவின் மகளான பிரியங்கா ரேபரேலியில் போட்டியிடுவார் என உறுதிப்படுத்தப் படாத தகவலாக கூறப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க காங்.,கட்சி ஒட்டுமொத்தமாக உ.பி.,யை கைகழுவுகிறதா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பேசும் தமிழன்
மார் 18, 2024 08:20

உ.பி மக்கள் தமிழர்களை போல ஏமாளிகள் அல்ல. எப்போதும் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான பேச்சு பேசி வந்தால் நாம் ஓட்டு போடுவோம். அதனால் தான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி இல்லை நாட்டுக்கு எதிராக பேசும் ஆட்களை தேர்தலின் போது விரட்டி அடிக்கிறார்கள் !!!


நரேந்திர பாரதி
மார் 18, 2024 04:16

இத்தாலி தகிடுதத்த குடும்பம், இந்த தேர்தலுக்கு பின்னர் இந்தியாவையே கை கழுவனும்


Shankar
மார் 18, 2024 01:17

இப்படியே ஒவ்வொரு மாநிலமாக சோனியா குடும்பம் மாறி மாறி கடைசியில் பாகிஸ்தான்ல தான் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவாங்க போலிருக்கு. அங்கே போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக ஜெயிக்கும்.


Visu
மார் 18, 2024 00:18

அவர்கள் தொகுதியை கைவிடவில்லை மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள்


பேசும் தமிழன்
மார் 18, 2024 08:23

மக்களிடம் விழிப்புணர்வு வந்து விட்டது... அது தான் உண்மை.... இனியும் போலியாக காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது !!! தாரளமாக உங்களின் குடும்ப முஸ்லீம் பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களிடம் ஓட்டு கேட்டு செல்லலாம் .


Kannan
மார் 17, 2024 23:10

சீதாராம் கேசரியை போல் இம்முறை காங்கிரஸ் அந்த குடும்ப தலைமையில் இருந்து விடுபடும்.காங்கிரஸ் கட்சிக்கு முழு விடுதலை கிடைக்கும் .ரெயபெரேலி ,அமேதி தோழ்வி வயநாட்டிலும் தொடரும் .


pakkoda
மார் 17, 2024 22:03

வாரனாசி அல்லது காந்தி நகர் ரெடி for பப்பு


Anantharaman Srinivasan
மார் 17, 2024 21:50

ஸ்மிருதி இரானியை எதிர்த்து தில்லாக அமேதியில் பிரியாங்கா போட்டியிட வேண்டும். பயந்து பின்வாங்க கூடாது.


Natarajan Ramanathan
மார் 17, 2024 21:42

ராவுல் வின்சி லச்சத்தீவு தொகுதியில் நிக்கலாமே. வெற்றி கிடைக்க வாய்ப்பு.


Ramesh Sargam
மார் 17, 2024 21:22

ரேபரேலி ,அமேதி மக்கள் காங்கிரஸ் கட்சியையே மறந்துவிட்டார்கள்.


Nagarajan D
மார் 17, 2024 21:16

பாரத தேசம் இந்த குடும்பத்தை கைகழுவி நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டால் நாடும் உருப்படும் காங்கிரஸ் கட்சியும் உருப்படும்...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை