உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரின் உட்கட்டமைப்பை சீர்குலைக்க பயங்கரவாதிகளை ஏவிவிடும் ஐ.எஸ்.ஐ.,

காஷ்மீரின் உட்கட்டமைப்பை சீர்குலைக்க பயங்கரவாதிகளை ஏவிவிடும் ஐ.எஸ்.ஐ.,

ஜம்மு, ஜம்மு - காஷ்மீரின் உட்கட்டமைப்பு வளர்ச்சி பணிகளை தடுக்கும் நோக்கத்தில், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினர் நேரடி தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக நம் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை

காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ககாங்கிர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், தனியார் நிறுவனத்தை சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு, நேற்று முன்தினம் இரவு வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.இதில், ஆறு வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் டாக்டர் ஒருவர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து நம் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை 1ல், சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜம்மு பகுதியில் 20 - 25 சுரங்கங்களும், லே - லடாக் பகுதியில் 10 - 11 சுரங்கங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், ககாங்கிர் பகுதியில் அமைக்கப்படும் ஜி - மோர் சுரங்கம் மிக முக்கியமானது. இதில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இயல்பு நிலை

இந்த இடத்தில் பயங்கரவாதிகள் திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு நடத்திஉள்ளனர். இந்த சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டால் ராணுவ பலம் அதிகரிக்கும். எனவே, நம் உள்கட்டமைப்பு பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். ஜம்மு - காஷ்மீரில், 45 நாட்களாக நடந்த தேர்தல் பணியின் போது ஒரு அசம்பாவித சம்பவம் கூட நடக்கவில்லை. முடிவுகள் வெளியான சில நாட்களில் இரண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன.ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திருப்பிவிடக்கூடாது என்பதில் பயங்கரவாதிகள் கவனமாக உள்ளனர். ஐ.எஸ்.ஐ., உதவியுடன் இந்த தாக்குதல் அரங்கேறி உள்ளது.லஷ்கர், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகளின் உதவியுடன், ஜம்மு - காஷ்மீரின் அமைதியை குலைக்க ஐ.எஸ்.ஐ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்களில் இருந்தே ஐ.எஸ்.ஐ.,யின் பங்கு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல்வருக்கு வலுக்கும் எதிர்ப்பு

பயங்கரவாத தாக்குதல் குறித்து ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 'போராளிகள் நடத்திய தாக்குதல்' என, குறிப்பிட்டுள்ளார். இதற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'தாக்குதல் நடத்தியவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடாமல் போராளிகள் என்று குறிப்பிட்டது ஏன்?' என, சமூகவலைதள பயனாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.'நீங்கள் யூனியன் பிரதேசத்தின் முதல்வர் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் கோமாளித்தனங்களை மக்கள் கவனித்து கொண்டுள்ளனர். மேலும், உங்கள் பேச்சால் மாநில உரிமைக்கான சாத்தியம் பறிபோகவும் வாய்ப்புள்ளது' என, மற்றொரு பயனாளர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SRISIBI A
அக் 22, 2024 12:18

இதற்குத்தான் ஏற்கனவே எழுதி இருந்தேன் காஸ்மீரில் தேர்தல் தேவை இல்லை என்று. காஸ்மீர் முஸ்லீம் பாகிஸ்தான் பிட்சை எடுத்து தரும் பணத்தில் ரொட்டி திங்கும் வஞ்சக தீவிரவாதிகள் கூட்டம்


சமீபத்திய செய்தி