உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பு; மத்திய அரசு

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பு; மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் பணி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. சட்ட விரோதமாக ஊடுருபவர்களை அகற்றுவது நமது பொறுப்பாக இருக்க வேண்டும் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத குடியேற்றம் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​அவர்கள் வங்கதேசம் வழியாக சட்டவிரோதமாக வந்தனர்.போலி ஆவணங்களை உருவாக்கி, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், காங்கிரஸ் அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் ஆதரித்தது. அவர்கள் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேற வழிவகை செய்தது. வாக்காளர் பட்டியலில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இல்லை என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம். தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் பணி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. சட்டவிரோத மாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பாக இருக்க வேண்டும்இந்திய மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது நமது கடமையாகும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sivakumar
டிச 23, 2025 04:47

17 ஆண்டு பிஜேபி ஆட்சி 5 ஆண்டு வாஜ்பாய் யில் இந்த பேச்சிக்கு மட்டும் குறைவில்லை.


Krishna
டிச 22, 2025 23:27

Other than Propagandas& VV.Few Expulsions, Billions of Foreign Infiltrators Regularised by ModiMental AadharSpyMaster are Still ILLEGALLY GIVEN All Citizen Benefits& Services, While Natives DENIED. SHAME


Nathansamwi
டிச 22, 2025 22:53

உள்ள விட்டதே நீங்க தானே ? பிஎஸ்ப் படை எதுக்கு வச்ருகீங்க ? சும்மா உருட்ட கூடாது ...


Barakat Ali
டிச 22, 2025 19:35

2014 இல் இருந்து 2024 வரை தூங்கினீர்கள் .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை