உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய விமான நிறுவனத்தை துவக்க வேண்டிய நேரமிது: மத்திய அமைச்சர் ராம் மோகன்

புதிய விமான நிறுவனத்தை துவக்க வேண்டிய நேரமிது: மத்திய அமைச்சர் ராம் மோகன்

புதுடில்லி: ''முறையாக திட்டமிடப்படாததே, 'இண்டிகோ' விமான நிறுவனத்தின் பிரச்னைக்கு காரணம். விமானத் துறையில் உள்ள வாய்ப்புகளை பங்குதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாட்டில் புதிய விமான நிறுவனத்தை துவக்க வேண்டிய நேரமிது,'' என, விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். விமானிகளுக்கான பணி நேரம், விடுப்பு உள்ளிட்டவற்றில் விமான போ க்குவரத்து அமைச்சகம் திருத்தம் செய்தது. இந்த புதிய நடை முறை, நவ., 1 முதல் அமலுக்கு வந்தது. இதற்கு, நம் நாட்டில் அதிக விமா ன சேவைகளை வழங்கும், தனியார் துறையைச் சேர்ந்த பிரபல விமான நிறுவனமான இண்டிகோ கடு ம் எதிர்ப்பு தெரிவித்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில், அந்நிறுவனத்தின் விமான சேவைகள் நாடு முழுதும் முடங்கின. இதனால் ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள், திடீரென விமான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தின. இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பு நிர்ணயித்தது. இந்நிலை யில், 'இண்டிகோ' விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த விமான போக்குவரத்து அமை ச்சர் ராம் மோகன் நாயு டு நேற்று கூறியதாவது: இது, 'இண்டிகோ' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயல்பாட்டு பிரச்னை. விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கான பணி அட்டவணையை அந்நிறுவனம் முறையாக திட்டமிடாததே இதற்கு காரணம். நவ., 1ம் தேதி கூட, அந்நிறுவனத்தின் உயர்அதிகாரிகளுடன் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. அவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் உடனடியாக தீர்வு அளிக்கப்பட்டது. எனினும், அந்நிறுவனம் முறையாக திட்டமிடவில்லை. இது அந்நிறுவனத்துக்கு மட்டுமல்ல, விமான போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு பாடம். 'இண்டிகோ' விவகாரத்தை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விமானத் துறையில் உள்ள வாய்ப்புகளை பல்வேறு நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய விமான நிறுவனத்தை துவக்க வேண்டிய நேரமிது. இது தொடர்பாக தொழில் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

500 விமானங்கள் ரத்து

நாடு முழுதும், 'இண்டிகோ' நிறுவனத்தின், 500 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. டில்லியில் 134; பெங்களூரில் 127; ஹைதராபாதில் 77; சென்னையில் 71 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 137 இடங்களுக்கு, 1,802 விமான சேவைகள் இயக்கப்பட்டன. 4,500 பயணியரின் உடைமைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 4,500 உடைமைகள், அடுத்த, 36 மணி நேரத்தில் ஒப்படைக்கப்படும் என, 'இண்டிகோ' நிறுவனம் தெரிவித்துள்ளது. டிச., 17 வரை ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்களுக்கான, 569.65 கோடி ரூபாய் பணம், பயணியரின் வங்கி கணக்கில் திருப்பி சேர்க்கப்பட்டுள்ளது. நவ., 21 முதல் டிச., 7 வரை ரத்தான விமானங்களுக்கான டிக்கெட் கட்டணம், 827 கோடி ரூபாயும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

- டில்லி சிறப்பு நிருபர் - 'இண்டிகோ' விமான பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, 'இது மிகவும் தீவிரமான பிரச்னை. லட்சக்கணக்கானோர் விமான நிலையங்களில் தவிக்கின்றனர். 'இவை அனைத்தும் எங்களுக்கு தெரியும். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது. வழக்கமான விசாரணையாக இந்த மனு பட்டியலிடப்படும்' என, உத்தரவிட்டது. இதே போல, டில்லி உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை நாளை விசாரணைக்கு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Venugopal S
டிச 09, 2025 20:06

மத்திய பாஜக அரசு வழக்கம் போல அவருக்கு ஒன்று, இவருக்கு ஒன்று, அவ்வளவு தான் முடிந்தது!


Balaji
டிச 09, 2025 16:38

தாரை வார்க்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன


naranam
டிச 09, 2025 13:24

நீங்களே ஆரம்பித்து விடுங்களேன்!


ஆரூர் ரங்
டிச 09, 2025 12:53

நேர்மையாக விமான நிறுவனம் நடத்துவது ரொம்ப கஷ்டம். உலகம் முழுவதும் இதே நிலைதான். இங்கும் டஜன் தனியார் விமான நிறுவனங்கள் நஷ்டமடைந்து மூடப்பட்டது வரலாறு. வாயுதூத், பாவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர், இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா போன்ற அரசு நிறுவனங்களும் லாபம் ஈட்டியதில்லை . இந்தக் காரணங்களால்தான் அம்பானி அடானி அந்த தொழில் முயற்சியே செய்ததில்லை.


Venugopal S
டிச 09, 2025 10:36

அவ்வளவு தான்!


Yaro Oruvan
டிச 09, 2025 10:48

நம்ம இரும்புகரம் தலீவர்கிட்ட சொல்ல பஸ் விட சொல்லுப்பா..


Nandakumar
டிச 09, 2025 09:56

கண்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும் SC இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்காதா?


G Mahalingam
டிச 09, 2025 08:58

காங்கிரஸ் ஆட்சியில் டாடா பிர்லா ஒரே என்று இருந்தது. அப்போது‌ யாரும் இவர்களை பற்றி பேசவில்லை.‌. இந்தியர் இந்திய நாட்டில் முதலீடுகள் செய்வார்கள். அடுத்தது அதானி அம்பானி. இந்தியர். அடுத்த 10 ஆண்டுகளில் புதியதாக வருவார்கள். மத்திய அரசு, திமுக குடும்பம் இந்த தொழிலை நடத்த அனுமதி கேட்டால் அனுமதி கொடுப்பார்கள். ஆனால் சாராய தொழிலில் 200 மடங்கு லாபம் இருக்கு. வரி கட்டாமல் வியாபாரம் செய்ய முடியும்.


Mariadoss E
டிச 09, 2025 08:24

தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏன் மத்திய அரசு பூரண மது விலக்கை அமல் படுத்த கூடாது......


Manikandan
டிச 09, 2025 08:02

அதாநீஜியா அம்பாநீஜியா? யாருக்கு தாரை வார்க்க?


Nathansamwi
டிச 09, 2025 08:02

அப்டினா அதானி வாராருனு அர்த்தமா அமைச்சரே ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை