உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., கூட்டணிக்கு தயார் ஜனார்த்தன ரெட்டி அறிவிப்பு

பா.ஜ., கூட்டணிக்கு தயார் ஜனார்த்தன ரெட்டி அறிவிப்பு

கொப்பால் : ''மீண்டும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். எனவே, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறேன்,'' என, கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி தலைவரும், கங்காவதி எம்.எல்.ஏ.,வுமான ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் காரணமாகவே பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறேன்.கூட்டணி ஒத்துவரவில்லை என்றாலும், லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எங்கள் கட்சி ஆதரவு தரும்.மாண்டியாவின் கெரகோடு கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனர். அவர்கள் ஒன்று கூடி, கொடிக்கம்பத்தை அமைத்து உள்ளனர். பல ஆண்டுகளாக இதுபோன்று கொடியேற்றி வருகின்றனர்.கிராம மக்களிடையே எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தான், நிலைமையை மோசமாக்குகிறது. இதனால் கிராமத்தினர் வேதனை அடைந்துள்ளனர். எனவே, முதல்வர் சித்தராமையா கிராமத்துக்கு வந்து, ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட காவிக் கொடியை ஏற்றி, அவர்களை சமாதானம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ