உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானி - ஹிண்டன்பர்க் வழக்கில் இன்று தீர்ப்பு

அதானி - ஹிண்டன்பர்க் வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடில்லி; அதானி குழும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தொடர்பான வழக்கில் இன்று (ஜன.03) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம், அதானி குழுமம். இந்நிறுவனம், துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல அயல்நாடுகளிலும் வர்த்தகம் செய்து, பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கவுதம் அதானி (61) உள்ளார்.இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த நிதி முதலீட்டு ஆராய்ச்சியில் புகழ் பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்.எல்.சி., எனும் நிறுவனம், இந்தியாவின் அதானி குழுமம் கணக்குகளில் முறைகேடுகளை செய்து பொய்யாக வெளியிட்டு வருவதாகவும், நிறுவன கடன்களை பெருமளவு மறைத்து இருப்பதாகவும், இதனால் பங்கு சந்தையில் தனது முதலீட்டாளர்களுக்கு உண்மையான தகவல்களை மறைத்த குற்றத்தை புரிந்ததாகவும் பெரும் குற்றச்சாட்டை வைத்தது.இந்த செய்தி வெளியானவுடன் அதானி நிறுவன பங்குகள் இந்திய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SUBBU,MADURAI
ஜன 03, 2024 08:41

Opposition is trying hard to panic among people over SBI and LIC Its nonsense Adani group only 0.7 for public sector banks and 0.3 for private banks not even 1 just 0.5 Desperate liberals spread silly rumours. But Adanis recovery has been spectacular and he has gained trust also.


Duruvesan
ஜன 03, 2024 06:07

பங்கு சந்தை பற்றி விழிப்புணர்வு இல்லைனா கருத்து போட வேண்டாம். ஆபத்தானது உண்மை,இன்னைக்கி வாங்கி நாளைக்கு விக்கனும்னா. Long term its best. விழிப்புணர்வு இல்லாதவர் MF ல போடலாம்,3 வருடம் வெச்சி இருந்தா கண்டிப்பா பேங்க் interest காட்டிலும் கூடுதல் லாபம் வரும்


Duruvesan
ஜன 03, 2024 06:03

அதானி shares இண்டி கூட்டணி காரங்க தான் நெறய வெச்சி இருக்காங்க. இல்லைனு விடியலும் ராவுளும் அறிக்கை உடுவாங்களா? Hinden berg Short selling பண்ணியது ஏன்? இப்பொ 100% மேல போனது ஏன்? அதானி ports 380 கு வாங்கி இருந்தேன்,900 போச்சி. ஒரே நாள்ல 420 கீழ இறங்கி 480 ஆச்சி, திருப்பி எல்லோரும் வாங்கினாங்க, volume அதிகம் வாங்கினது பெரிய அரசியல் புள்ளிகள் தான் இருக்கும், இப்பொ 1080 ஆயிடுச்சி. Short selling bulk ah பண்ணது இண்டி kootaani ஆட்கள் யாரு?


Kasimani Baskaran
ஜன 03, 2024 04:59

பங்குச்சந்தை ஆபத்தானது என்றுதான் தீர்ப்புக்கொடுப்பார்கள். இதெல்லாம் சின்ன எழுத்துக்களில் பக்கத்தில் கீழ்ப்பகுதியில் போட்டிருப்பார்கள். நன்றாக படித்து அதன்பின் முதலீடு செய்யவும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை