உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை கோவிலில் நீதிபதி குழு ஆய்வு

சபரிமலை கோவிலில் நீதிபதி குழு ஆய்வு

பத்தனம்திட்டா: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை வாயிலில் உள்ள இரு துவாரபாலகர்கள் சிலை களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு 2019ல் அனுப்பப்பட்டன. திருப்பித் தரப்பட்ட கவசங்களில் 4 கிலோ தங்கம் மாயமானது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள பொருட்களை மதிப்பீடு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையில் கேரள உயர் நீதிமன்றம் குழு அமைத்தது. இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி சங்கரன், ஒரு பொற்கொல்லர் மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் குழுவினர் அய்யப் பன் கோவிலில் நேற்று ஆய்வை துவங்கியது. துவா ரபாலகர்கள் சிலை, அவருக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்க கவசம் உள்ளிட்டவற்றை சோதனை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி, அது தொடர்பான பட்டியலையும் தயாரித் தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
அக் 12, 2025 09:50

மத்திய அராசில் தலைமை விஞ்ஞானியாக பணிசெய்த வரின் கருத்து .. தங்க முலாம் பூசுதல் ..அறிய விஞ்ஞான தொழில்நுட்பம். இதில் மேடேறியள் சயின்ஸ் அதிக பங்கு வகிக்கிறது . வெறும் அளவுகோலுலகள் மட்டும் இந்த மின்வேதியியல் செயலை அளவிடையலாது . தங்கமும் தாமிரமும் வேறுவேறு மின்வெதி இயல் பண்புகளை கொணடாவை. மெல்லிய தங்க பூச்சு தாமிரத்துடன் வினைபுரியலாம் ..சுற்று சூழல் எப்படி என அறியவில்லை. ஆனால் தண்ணீர் துளிகள் நீராவி போன்றவைகள் இதை ஊக்கப்படுத்தியிருக்கலாம்


Ramesh Sargam
அக் 12, 2025 08:41

இந்த கம்யூனிஸ்ட் காரங்களுக்கும், திமுக காரங்களுக்கும் ரொம்ப குஷி. மூக்கை மட்டும் நுழைப்பதில்லை, கோவில் சொத்துக்களை திருடுவதிலும் ரொம்ப ரொம்ப குஷி.


முக்கிய வீடியோ